நா.வா.க. ந Tம் ஒரு திருமண விருந் துக்குப் போகிறோம். தயாரிக்கப் பட்ட உணவு நாவுக்கு சுவை யாக இருந்தால் சற்று அதிகமாக வயிறு புடைக்க உண்டு விடு கிறோம். உண்டவர்களுக்கு திரவங்களைக் கொடுத்து விடக் கூடாது என்று எண்ணியே விருந்து நடத்துவோர், இறுதி யாக பாயசம் என்ற ஒர் இனிப் புச் சுவை நீரை வழங்கி உண்ணச் செய்கிறார்கள். ஏன் தெரியுமா? உண்ட உணவு விரைவில் ஜீரணம் ஆகிவிட வேண்டும் என்பதற் காகத்தான் பாயசம் என்ற சுவை மிகு நீரை விருந்தின்போது கொடுக்கின்றார்கள். முஸ்லீம் மக்கள் நடத்தும் விருந்து என்றாலும், கிறித்துவர் கள் விருந்து என்றாலும், பிரி யாணியை அருமையான சுவை யோடு தயாரித்து உபசரிப் பார்கள். அது ஜீரணமாவதற்காக விருந்து படைப்பதற்கு முன் னாலேயே ஒருவகை சுவை நீரைக் குடிக்கக் கொடுக்கிறார் ᏭᏚᏊaᎢ. உணவு ஜீரணமாக இனிப்புச் சுவை நீரை வழங்குவது நமது நாட்டுக்குரிய மரபாக உள்ளது. காரணம், உணவு அஜீரணத்தை உண்டாக்கி, விருந்து படைப் போர்க்கு எந்த அவப் பெயரும் வந்துவிடக் கூடாதே என்பது தான். விருந்துண்போரும் மீதுாண் விரும்பேல் அளவுக்கு மிஞ்சி உயத் னால் அமுதமும் நஞ்சாகும் என்ற பழமொழியை நினைவு கூரல் நல்லதாகும். உணவை வேளை தவறாமல் குறிப்பிட்ட நேரத்திற்கு உண் ணப் பழகிக் கொள்வது மிகமிக முக்கியமானதாகும். வேளை தவறி உணவை உண்டால் உடல் நலக்கோளாறுகள் தோன்றுவதற்கு நாமே இடம் கொடுத்தவர் களாகி விடுவோம். எனவே தினந் தோறும் நேரத்தில் சாப்பிடுவதை கவனத்தில் கொள்ள வேண்டும். உணவைப் பற்களால் நன் றாக அரைத்து உண்ண வேண்டும். நாம் உண்ட உணவுக் கவளம் உணவுக் குழாயின் வழியாக இரைப்பைக்குள்ளே போகிறது. அங்கே உணவு வகைகள் ஒன்று கலந்து சிறுகுடலில் சேர்கின்றது. இந்த உணவுப் பாதையி லிருந்து மற்றொரு பகுதிக்கு தானாகப் போக முடியாது. அதனைத் தள்ளிவிட வேண்டும். இட்லி மாவு அரைக்கும் தாய் மார்கள், உரலுக்கு வெளியே வரும் மாவை கையால் கடைசி வரை தள்ளித் தள்ளி அரைப் பதைப்போல, உணவுப் பாதை யில் தள்ளிவிட, பல தசைகள் இருக்கின்றன. அதனால் உணவு முன்னே செல்கிறது. வாய் வழியாக, விழுங்கப் பட்ட உணவு, எப்படி உள்ளே போயிற்றோ, அதே போல வெளியே வராது. காரணம், உண்ட உணவு வயிற்றுக்குள் பல மாறுதல்களைப் பெறுவதுதான். உணவில் உள்ள சத்து இரத் தத்தில் கலக்கின்றது. இந்த கலந்து விடும் தன்மையை, உணவு மாறு தலைத்தான் நாம் ஜீரணம் செரி மானம் என்று சொல்கிறோம். உணவு வகைகள் ஜீரணமான பின்பு உடலுக்குப் பயன்படும் பகுதி இரத்தத்தால் இழுத்துக் கொள்ளப்படுகின்றது. மீதமுள்ள பகுதி வெளியேற்றப்படுகின்றது. எனவே, உணவுப் பாதையில் உணவு செரிமானம் பல பகுதி களிலும் நடைபெறுகின்றது. நாம் உண்ணும் உணவு ஜீரண மாவதற்கு உதவி செய்ய சில அமிலங்கள் உடலில் சுரக்கின் pgūt. Digestive Juices a lép sắiai அதிகம் சுரக்கின்றது. பற்கள் உணவை அரைக்கும்போது இந்த உமிழ்நீர் அமிலமும் அரைபட்டு உணவோடு கலக்கின்றது. இப் படி நன்றாக அரைக்கப்பட்ட உணவை விழுகியதற்குப் பிறகு உணவு மீது நமக்கு எந்தக் கட் டுப்பாடும் இருக்காது. இறுதி யாக அந்த உணவு வயிற்றுப் பகுதிக்குள் சென்றடைகின்றது. இதைத்தான் இரைப்பை என்கி றார்கள் டாக்டர்கள். இந்த இரைப்பையில் உணவு நன்றாக செரிமானம் ஆகாவிட் டால் அதனால் பல கேடுகள் உண்டாகின்றது. உண்ணும் உணவு அஜீரண மாகாமல் நன்றாக ஜீரணமாக வேண்டும். அப்போது தான் நம்மால் ஆரோக்கிய வாழ்வை வாழ முடியும். ஜனவரி 2005
பக்கம்:மாத இதழ் கட்டுரைகள்.pdf/31
Appearance