பக்கம்:மாத இதழ் கட்டுரைகள்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகப் பார்வையில் தமிழ்மறை! எழுத்தின் வடிவத்தையும், எழுத்தின் ஒலி வடிவத்தையும் தமிழ்ச் சான்றோர் உருவாக்கியபோது, எண்ணற்ற மேதைகள் அதற்காக உழைத்தார்கள். ஞாலம், ஞானத் திரட்சிக்காகக் கையேந்தி நிற்கும் காலத்தில் கோலத் தமிழ் எழுத்து ஒவரியக் கூட்டங்களை, அவர்கள் உருவாக்கினார்கள். ஓங்காரத் தமிழ் மொழியின் பயனை ஒள்ந்து, ஆங்கார ஆதவனின் எரி நெருப்பை அலட்சியப்படுத்தி, பாங்கான தங்களின் பண்புகளுக்கு வாழ்த்துக் கறியவர்கள் - அந்தத் தமிழ் அறிஞர்கள். திங்கு உளம் நடுங்கும் திந்தமிழ் மனமுடைய அவர்கள், பரன்பரை பரம்பரையாகத் தமிழ் இலக்கிய, இலக்கணங்களை ஒவசியமாய் காவசியமாய், வாழ்க்கைத் தத்துவமாய் இயற்றி மறைந்தார்கள். அழுதுகொண்டே பிறக்கின்ற மனிதப் பிஞ்சு? சிரித்துக் கொண்டே சாகும்வரை - வாழ்க்கைக்குரிய மனித நெறித் தத்துவங்களை, 'அகம்புறம் என்று தமிழிலே வடித்துத் தந்தார்கள். காலம்; அவர்களைக் களவாடிச் சென்றாலும், அந்தக் கன்னித் தமிழ் சிந்தனையாளர்கள் தேடித் தந்த சிந்தனைச் செல்வங்கள் - இன்றும் நம்மிடையே நடமாடுகின்றன. குடல் விழுங்கும் உணவைப் போல, கபாடபுரத்துப் பைந்தமிழ்க் கருவூலங்களை, தென் மதுரைத் தமிழ்ப் புதையல்களை, கடல் விழுங்கியபோதும், கண்டு கலங்காத அறிவேறுகளாக - அவர்கள் திகழ்ந்தார்கள். - உலகமே சிந்திக்கத் திராணியற்று காலச் சிதைவுக்கு ஆட்பட்டுக் கலங்கிக் கிடந்த நேரத்தில் - "யாதும் ஊரே - யாவரும் கேளி' என்ற ஒருலகச் சமுதாயத் தத்துவத்தைத் தமிழ்ப் பண்பாட்டின் வாயிலாக கொஞ்சு தமிழால் உலகுக்கு விளக்கிக் கொண்டிருந்த இனம் - தமிழினம். காலக் கரையான்களால் அழிக்கப்படாத அந்தத் தமிழ் இனத்திலேதான், பரன்பரை பரம்பரையாகத் தமிழ் மேதைகள் தோன்றித் தெள்ளுதமிழை வளர்ப்பதற்காகச் சீரியத் தொண்டாற்றி வந்தனர். நெடுங்குன்றம் நிமிர்ந்து நின்ற உச்சிக்கு மேல் நின்ற தமிழ் நிலவாய், ஞானச் செந்தாமரை எழிலையும் தோற்கடிக்கும் திருக்குறள் தோற்றமாய், தமிழ்ப் புண்பூாட்டிற்குத் தடம் புரளா அறிவூட்டும் சிந்தனையாளராயப் அவர்களிலே ஒருவராக இன்றும் நிலைத்து நிற்பவர்தான் திருவள்ளுவர் பெம்மான். w நெசவு தி தொழிலைச் செயi துக் கொணர் டே, அவர் வாழ்க்கையையும் நெய்து வந்தார் மனித வாழ்க்கை, தறியின் பாவை விட - மிக வேகமாக ஓடுவதைக் கண்டாள். அதனால் தான், வாழ்க்கையை நெய்ய ஆரம் 1