and inman there is nothing great - but mind”. "மனிதனைவிடச் சிறந்த ஒரு பொருள் இல்ல்ை, மனிதனுக்குள் இருப்பவற்றில் சீரிய அறிவை விட அரிய பொருள் ஒன்றும் இல்லை” என்ற சாக்ரட்டீசின் ஞானத்தை அவர் பெற்றிருந்ததே காரணமாகும். இத்தகைய உலக மக்கள் வாழ்கின்ற இந்த உலகத்தை, இன்று நான்கு மதங்கள் ஆட்சி செய்கின்றன. அவை - பவுத்தம், கிறித்துவம், இஸ்லாம்; அன்றைய வைதீக மதம் என்று அழைக்கப்பட்ட இன்றைய இந்து மதம் என்பவை ஆகும். இந்த மதங்கள் எந்தெந்த உலக நாடுகளை மதத்தின் பெயரால் ஆதிக்கம் செய் கின்றன என்பதை உலக அறிஞர்கள் நன்கு உணர்வான்கள். سا تحطوا மதம் என்றாலே - கடவுள் உயிர் ஆன்மா வழிபாடுகள்,அந்தந்த மதக் கோட்பாடுகளை அமல்படுத்தும் நெறிகளைக் கொண்டவை. அவற்றை உலகப் பார்வையில் இங்கே சுருக்கமாகப் பார்ப்போம். திருவள்ளுவர் தனது திருக்குறள் நூலை - வெண்பா பாவரின இலக்கணத்திலுள்ள இறுதி ஈற்றடிகளின் முதலடியில் நாற் சீர்களாலும், இரண்டாம் இறுதி அடியில் முச்சீர்களையும் அமைத்து, ஏழுசீர்களில் ஏன் எழதினார்? இறைவனை அடைதற்குரிய படி முறைகள் நான்கு. அவை: சிலம், நோன்பு. செறிவு (யோகம்) அறிவு என்பவை, இறைவன் உயிர்களிடத்திலே ஒன்றாப், வேறாய், உடனாப், புணரும் முப்புணர்ப்பால் புணர்ந்து - தனது அருளை இன்பத்தை உயிர்கட்கு வழங்குபவன் என்பதால், திருக்குறள் பா அமைப்பை ஏழு சீர்களால் உருவாக்கினார். ஏன் அவப்வாறு திருவள்ளுவர் எழுதினாள்? அவர் காலத்தில் ஒரளவு பரவியிருந்த சாங்கியம், மீமாஞ்சம், வைதீகம், சமணம், பவுத்தம், சாள்வாகம் போன்ற சமையங்கள்; "கடவுள் என்ற ஒன்று தேவையில்லை என்று கூறி, இறை கொள்கை இல்லாதவையாக இருந்தன. அறவாழ்வு, அல்லது ஒழுக்கம் மட்டுமே இருந்தால் போதும்-மக்கள் வாழ்க்கை சிறக்கும் என்று பிரச்சாரம் செய்திருந்தன. இந்த சமைய நெறியைத் திருவள்ளுவர் மிக எச்சரிக்கையோடு எதிர்த்து, அறவாழ்வு, ஒழுக்கம் அமைந்து நிலை பெறுவதற்குக் கட, இறையுணர்வு ம், வழிபாடும் தேவை' என்று வலியுறுத்தி - வற்புறுத்தியதால் தான். . "அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தான்க்குஅல்லால்: பிற ஆழி நீந்தல் அரிது (8) "பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்திர் ஒழுக்க நெறி நின்றாள் நீடுவாழ் வார் (6) -என்ற இறை ஒழுக்க நெறிகளைக் கூறினார். திருவள்ளுவர் தான் எழுதிய கடவுள் வாழ்த்து அதிகாரத்தின் பத்துப் பாடல்களோடு நில்லாமல், "உலகியற்றியான்", வகுத்தான் வகுத்த வகையல்லால் "உலகத்தார் உண்டென்பது இல்லென்பான்", "முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறை" என்ற குறட்பாச்களில் 3
பக்கம்:மாத இதழ் கட்டுரைகள்.pdf/6
Appearance