பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 பேராசிரியர் ந.சஞ்சீவி தூண்டுதலால் இராணி மீனாட்சிக்கு எதிராக, பங்காரு திருமலை என்பவன் அரசுரிமையைப் பெறப் பெருங்குழப்பம் செய்தான். வீடு பற்றி எரியும் நேரத்தில் தீவட்டிக் கொள்ளைக்காரன் புகுந்த நிலையை எய்தின திருச்சிராப்பள்ளியும், மதுரையும். பங்காரு திருமலை. நவாபு சாப்தர் அலிக்குப் பணத்தை வாரி வழங்கினான். இராணி மீனாட்சி சந்தா சாகிபுவிடம் ஒப்பந்தம் பேச ஆரம்பித்தாள். நவாபுவின் படைத் தலைவர்களோ இரு கைகளாலும் இரு தரப்பிலும் ஏராளமான பொருளைப் பறித்து விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டு, முடிவாக இரு கட்சிக்கும் துரோகம் செய்ய முனைந்தார்கள். இராணி மீனாட்சியிடம் ஒரு கோடி ரூபாயை வாங்கிக் கொண்டு, சந்தா சாகிபு ஆர்க்காட்டிற்குத் திரும்பிச் சென்றான்; மீண்டும் 1736ல் திரும்பி வந்தான். இந்த முறை எப்படியாவது நாயக்கர் அரசை நம் வசமாக்க வேண்டும்' என்ற உறுதி அவன் உள்ளத்தில் உரம் பெற்று நின்றது. அவன் சமர் புரிந்தான் சதிகள் பல செய்தான். குர்ஆனின் மேல் சத்தியம் செய்வதாக இராணி மீனாட்சியிடம் பாசாங்கு பண்ணி, பட்டுத் துணியில் சுற்றி வைத்திருந்த செங்கல்லின்மேல் கையறைந்து உறுதி மொழி கொடுத்து. அரசியை ஏமாற்றினான். சந்தா சாகிபுவின் சதிகளால் தன் படை வலியும் மனவலியும் உடைந்து உருக்குலைந்த இராணி மீனாட்சி - அந்தோ - நஞ்சுண்டு மாண்டாள்! உள் நாட்டுக் குழப்பங்களும் முகம்மதியப் படையெடுப்பும் மலிந்த அந்நாளில், தமிழ் நாட்டு மக்கள் அடைந்த தவிப்பு வேதனை நிறைந்தது. பொன்னும் பொருளும் பறிபோயின; ஆலயங்களும் அரண்மனைகளும் மாசு படுத்தப்பட்டன; கள்வரும் கயவரும் கணக்கின்றிப் பெருகினர் மாதர் கற்பும் பொறுமையும் சூறையாடப்பட்டன; இலஞ்சமும் பஞ்சமும் தலைவிரித்து ஆடின. நாயக்கர் ஆட்சியைக் கைப்பற்றிய சந்தா சாகிபு தன் இரு சகோதரர்களின் துணை கொண்டு நாட்டின் நிருவாகத்தை நடத்தி வந்தான். அவன் வெற்றி அப்போது ஆர்க்காட்டு நவாபுவாய் இருந்த தோஸ்து அலிகான் மனத்தில் பொறாமைத் தீயை மூட்டியது. ஐதராபாது நைஸாமோ, ஆர்க்காட்டு நவாபுவின் வளர்ச்சியைக் கண்டு வயிறெரிந்தான். இந்நிலையில் பம்பாய் மாகாணத்தைச் சேர்ந்த மராத்தியர் தமிழகத்திற்குப் பெருந்தொல்லைகள் இழைத்து வநதனர். ஆண்டுதோறும் அவர்களுக்கு ஒரு பெருந்தொகையைக் காணிக்கையாகக் கொடுத்து அழாவிட்டால், புகைச்சலும் போரும் மிகும். இத்தகைய மராத்தியர் கர்நாடகத்தின் மீது படையெடுத்துக் கொள்ளையிடத் திட்டம் தீட்டினர். அவர்களுடைய தீய எண்ணத் தீக்கு நெய் வார்த்தான் வஞ்சகவுள்ளம் படைத்த ஐதராபாது நைஸ்ாம். 1739ல் மராத்திரியர் பத்தாயிரம் படை வீரர்களுடன் தமிழகத்தை நோக்கிப் படையெடுத்து வந்தனர். அப்படைக்குத் தலைமை தாங்கிய