பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 94 இராக்கோசி பான்ஸ்லே ஆர்க்காட்டு நவாபுவான தோஸ்து அலிகானைக் கொலை புரிந்தான் ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் நவாபுவின் மகன் சாப்தர் அலிக்கு உயிர்ப்பிச்சை கொடுப்பதாகக் கூறினான். இந்நிலையிலும் தனக்கு ஒரு கண் டோனாலும் எதிரிக்கு இரு கண்களும்போக வேண்டும் என்று எண்ணி ஆர்க்காட்டில் சந்தா சாகிபுவுக்கு விரோதமாக இரகசியங்கள் பேசப்பட்டன. அவற்றின் பயனாக மராத்தியப் படையெடுப்பு 1741ல் மீண்டும் ஒரு முறை நிகழ்ந்தது. அப்படையெடுப்பில் சந்தா சாகிபுவின் இரு சகோதரர்களும் கொலை செய்யப்பட்டார்கள். சந்தா சாகிபு கைதியாகி, சதாராவிற்கு இழுத்துச் செல்லப்பட்டான். அவன் ஆண்ட அரசபீடம் முராரி ராவிடம் ஒப்படைக்கப்பட்டது. 1736ல் மீனாட்சியின் ஆட்சிக்கு உலை வைத்த சந்தா சாகிபுவின் நிலை இவ்வாறு ஆகியது. மராத்தியர் படையெடுப்பின் போதும் தமிழ் நாட்டு வீரர்கட்கு உடன் பிறந்தே கொல்லும் வியாதியாய் அமைந்த புதுக்கோட்டைத்தொண்டைமான்செய்த துரோகம், கொஞ்சமன்று. சந்தா சாகிபுவுக்கு விரோதமாகப் பல்வகை உதவிகளையும் புரிந்து மராத்தியரிடம் நாட்டைக் காட்டிக் கொடுத்து மாவீரனென்று பட்டமும் பரிகம் பெற்றான்.துரோகியாகிய தொண்டைமான். மராத்தியர் படையெடுப்பால் நலிந்து போயிருந்த நற்றமிழ் நாட்டைக் குற்றுயிருடையதாக்க விரும்பினான் ஐதராபாது நைஸாம் எண்பதாயிரம் குதிரைப்படைகளோடும் இருபதாயிரம் காலாட்படைகளுடனும் கர்நாடகத்தை எதிர்த்துக் கடும்புயலாய்ச் சீறிவந்தான். பெரும் புயலில் வீடும், வயலும், ஒடும், கூரையும், மரமும், மட்டையும் பிய்ந்து சிதறுவது போலத் தமிழகம் அயலவர் படையெடுப்புகளால் அலங்கோலமாய்க் கிடந்த காட்சி அவனுக்கே வியப்பையூட்டியிருக்க வேண்டும். ஒவ்வோர் ஊரிலும், ஒவ்வொரு கோட்டையிலும், ஒவ்வொரு தளபதி இருந்தான். அந்த ஊருக்கு, அந்தக் கோட்டைக்கு, அந்தத் தளபதியே தன் நிகரில்லா நவாபுவாய்த்திரிந்தான். ஒருநாள் நைஸாமே, நான் இன்றுமட்டும் கர்நாடக நவாபுகள் என்ற பெயரால் பதினெட்டு நவாபுகளைச் சந்தித்துக் காணிக்கை பெற்று இருக்கிறேன். ஒரு நவாபுதான் கர்நாடகத்திற்கு, என்று நினைத்து வந்தேன். இத்தனை நவாபுகள் இங்கே இருக்கிறார்களே! என்று கூறினானாம். நைலாம் தன் சட்டபூர்வமான அதிகாரத்தை நினைத்துப் பார்த்தான். கர்நாடகத்தை நம் கருத்து வழிக் கட்டி ஆளப் பலம் பொருந்திய ஒரே நவாபுவை நியமிப்பதுதான் உத்தமம் என்ற ஞானோதயம் அவனுக்கு ஏற்பட்டது. எனவே, அவன் 1743-ல் மராத்தியர்களிடமிருந்த திருச்சிராப்பள்ளியைப் பறித்துக் கொண்டான். தொடர்ந்து மதுரையையும் கைப்பற்றினான். முராரி ராவ் தன்னைச் சேர்ந்த மராட்டியர்களுடன் மூட்டை முடிச்சுகளை இறுக்கிக் கட்டிக் கொண்டு கர்நாடகத்தை விட்டே வெளியேறினான். நைஸாமின் அட்டூழியங்களைப் பொறுக்கமாட்டாத