பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற்பதிப்பின் முன்னுரை மருது பாண்டியர் புகழை வையகம் முழுதும் பரப்ப வேண்டும் என்ற பேராவல் ஆறாண்டுகட்கு முன் என் உள்ளத்தில் கிளர்ந்தெழுந்தது. அவ்வேட்கையின் பயனாகப் பதினாறு மாதங்கட்கு முன் பிறந்ததே யான் எழுதிய 'மானங்காத்த மருது பாண்டியர்' என்ற சிறு நூல். முதன் முதலாக மருது சகோதரர்களைப் பற்றி வெளிவந்த இந்நூலைக் கண்ணுற்ற தமிழ் அன்பர்களும், அறிஞர்களும், பத்திரிகை ஆசிரியர்களும் என் முயற்சியைப் பெரிதும் பாராட்டி மகிழ்ந்தனர். அவர்கள் மகிழ்ச்சி எனக்குப் பேரூக்கம் அளித்தது. இந்நிலையில் என் நூலைப் பாராட்டித் தமிழகத்திலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் கடிதங்கள் வரைந்த நண்பர் பலர், நான் மேலும் முயன்று மருது பாண்டியர் வரலாற்றை விரிவாக எழுத வேண்டும் என்று விரும்பினர். அவர்கள் விருப்பத்தைக் கட்டளையாக ஏற்றுக் கொண்டு மருது சகோதரர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளைத் திரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தேன். அவ்வமயம் யான் மருது சகோதரர்களைப் பற்றி எழுதிய நூலைக் கண்ணுற்றுப் பெருமகிழ்வுற்ற சிவகங்கை நண்பர் திரு.எஸ். காளேஸ்வரன் அவர்கள் மருது பாண்டியர் பற்றித்தாம் அறிந்திருந்த குறிப்புகளை எனக்குத் தெரிவிக்க மனமுவந்து முன் வந்தார்கள். அவர்கள் நட்பையும் அழைப்பையும் பயன்படுத்திக் கொண்டு சிவகங்கைச் சீமையில் பதினைந்து நாள்களுக்கு மேல் சுற்றுப் பயணம் செய்தேன்; உரிய இடங்கள் பலவற்றிற்கும் சென்று புகைப்படங்கள் எடுத்தேன், செவி வழிச் செய்திகள் பலவற்றையும் தொகுத்தேன்; இன்றும் மருது பாண்டியர் புகழ் பாண்டி நாட்டு மக்கள் மனத்தில் மங்காமல் இருக்கும் மாட்சியை நேரில் கண்டு வியந்து இன்புற்றேன். என்னுடைய இம்முயற்சிகளில் எல்லாம் பெருந்துணை புரிந்த நண்பர் திரு.எஸ். காளேஸ்வரன் அவர்களையும், அவர் மைத்துனர் திரு. முத்துக்கறுப்பன் சேர்வை அவர்களையும், மற்ற அன்பர்களையும் நான் என்றும் மறவாது போற்றக் கடமைப்பட்டுள்ளேன். இவ்வன்பர்கள் துணையால் யான் பெற்ற செய்திச் செல்வங்களையும் துணையாகக் கொண்டு 'மருதிருவர் என்னும் நூல் எழுதும் பணியில் முனைந்தேன். மருது பாண்டியர் புகழை விளக்கவல்ல கல்வெட்டு பட்டயச் சான்றுகள், யான் ஆவலுடன் எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லை என்பது உண்மையே. இதற்குக் காரணம், மருது பாண்டியரால் தரப்பட்ட சாசனங்கள் அனைத்தையும் மருதிருவருக்குப்பின் சீமை உரிமையைக் கைப்பற்றியவர்கள் வாங்கித் தங்கள் பெயரில் புதுப்பித்து விட்டனர் எனக் கூறப்படுகிறது. சாசனங்கள் பற்றிய நிலையும் கருத்தும் இதுவாக, யான்