பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 பேராசிரியர் ந.சஞ்சீவி அசைக்க முடியாத நிலையில் வெள்ளையரின் ஆட்சி தமிழகத்தில் வேரூன்றியது. ஒண்ட வந்த வெள்ளைப் பிடாரிகளும் ஆர்க்காட்டு நவாபுவையும் புதுக்கோட்டைத் தொண்டைமானையும் போன்ற ஊர்ப் பிடாரிகளும் சேர்ந்து, நாட்டின் மானத்தைக் காற்றில் பறக்கவிட்டுக் கொண்டிருந்தன. பூலித்தேவர் போன்ற விடுதலை வீரர்கள் அக்கொடுமையை எதிர்த்துப் போரிட்டு வீர மரணம் எய்தினர்." இச்சூழ்நிலையிலே தான் நம் அருமைத் தலைவர்களாகிய மருது சகோதரர்கள் பிறந்தார்கள். அந்நிய ஏகாதிபத்தியம் வேரூன்றும் போதே அதன் வேரைக்கல்லி எறியவல்ல மாவீரர்களைப் பெற்றுக் கொடுத்த தமிழ்த்தாயின் மணிவயிறே வயிறு அம்மணி வயிற்றிலே பிறந்த மாணிக்கங்கள் வல்லமை மிக்க காலக் கடவுளிடம் சுதந்தரதேவதை வரமிருந்து பெற்ற பரிசு. இவ்வாய்மையை மனமார உணரும் பொருட்டே கடந்த காலத் தமிழகத்தின் வரலாற்றை இவ்வளவு ஊடுருவிப் பார்த்தோம். ஆம். ஒளரங்கசீபு காலத்திலிருந்து ஆர்க்காட்டு நவாபுகாலம் வரை சென்ற ஒன்றரை நூற்றாண்டுகளாகத் தமிழ் நாட்டு மக்கள் அந்நியப் படையெடுப்புகளால் பட்ட அவதிகளையும் அல்லல்களையும் இதுவரை பார்த்தோம். இந்தத் துன்பங்களாலும் துயரங்களாலும் தமிழ்நாட்டு மக்களுடைய நெஞ்சிலே மூண்டிருந்த கோபத்தீ நாளடைவில் எழுநாவிட்டு எரியும் ஏகாதிபத்திய எதிர்ப்புத் தீயாய் மாறியது. ஆர்க்காட்டு நவாபுவின் வெற்றி தமிழகத்தின் அடிமை வாழ்விற்கு இடப்பட்ட அடித்தளம் என்பதை அறியாதவர்களல்ல மறவர்நாட்டு மக்கள். திருச்சிராப்பள்ளிக் கோட்டையில் கண்ட வெற்றியால் ஆர்க்காட்டு நவாபுவின் மனம் திருப்த்தி அடையவில்லை. ஏனைய தமிழ்ப்பகுதி மக்களை ஆங்கிலேயரின் படை வலி கொண்டு சூறையாடியதுபோலச் சுலபமாக இராமநாதபுரம் - சிவகங்கை நாடுகளைக் கொள்ளை கொள்வதென்பது ஆர்க்காட்டு நவாபுவுக்கு இயலாத செயலாய் இருந்தது. எனவே, அவன், பெரிய மறவர் நாட்டிலும் சிறிய மறவர் நாட்டிலும் வாழும் வீரச் சிங்கங்கள் விரைவில் கிழட்டுச் சிங்கங்களாகி மாயட்டும்; இரு நாடுகளையும் ஒரு கை பார்ப்போம்! அல்லா' செய்வோம்,' என்று திட்டமிட்டுக் கொண்டிருந்தான். இவ்வுண்மையைப் பல்வகையாலும் அறிந்த பாண்டி நாட்டு மக்கள் நெஞ்சிலே சுதந்தரத் தீக்கொழுந்து விட்டு எரிந்தது. தங்கள் தாய்த்திருநாட்டிற்கு - தெய்வத்தினும் பெரிய தமிழ் நாட்டிற்கு - நேர்ந்த கதியையும் அவமானத்தையும் எண்ணி எண்ணி அவர்கள் உடலும் உள்ளமும் உயிரும் துடித்தன. குமரி முதல் இமயம் வரை ஒரு ம்ொழி வைத்தாண்ட தமிழ் மரபு, எங்கிருந்தோ வந்த பரதேசிப்படைக்கும் அடிமைப்புத்தி படைத்த ஆர்க்காட்டு நவாபுவுக்குமா கைகட்டி வாழ்ந்து கப்பம் செலுத்துவது' என்று எண்ணியபோதெல்லாம் அவர்கள் அடி வயிற்றில் ஆத்திரத்தீ மூண்டது. நாளடைவில் எண்ணற்ற தேசபத்தர்களின்