பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 பேராசிரியர் ந.சஞ்சீவி சென்றார். அவருடைய சகோதரி மைந்தர் முத்து இராமலிங்கத்தேவர் பட்டத்திலமர்ந்தார். அப்பொழுது அவருக்கு வயது இரண்டு மாதம்! பாலகனின் ஆட்சி தொடங்கியதும் பலமிகுந்த தளவாய் சேர்வையார் மண்ணுலக வாழ்வை நீத்தார். அவர் பதவியில் தாமோதரம் பிள்ளை அமர்ந்தார். குழந்தை சேதுபதியின் கார்டியனாகத் தாயார் முத்திருவை நாச்சியார் நாட்டின் நிருவாகத்தைக் கவனித்து வந்தார். அமைச்சர் தாமோதரம் பிள்ளை இராமநாதபுரத்தின் அரண்மனைகளையெல்லாம் புதுப்பித்துப் பலப்படுத்தினார் திருப்புல்லணையில் கோட்டை ஒன்றைக் கட்டினார்; அதன் பின் மதுரையை ஆண்ட நாயக்கர் ஆட்சியை அடுத்துக் கவ்விக் கொண்டிருந்த ஆர்க்காட்டு நவாபுவைக் கடுமையாக எதிர்த்தார்; சேதுபதியிடம் ஆர்க்காட்டு நவாபு கப்பம் வாங்க அனுப்பிய பட்டாளத்தைத் தோல்வியுற்றுத் திரும்பி ஓடச்செய்தார், உள்நாட்டுக் கலகங்களை எல்லாம் ஒடுக்கினார். டச்சுக்காரர்களுடன் 1767-ல் நேச உடன் படிக்கை செய்து கொண்டார்; 1770ல் நேர்ந்த தஞ்சை மன்னன் படையெடுப்பை நாசமாக்கினார்; சுருங்கச் சொன்னால், மீண்டும் மறவர் நாட்டின் புகழைக் குன்றின்மேலிட்ட விளக்காகச் செய்ய முற்பட்டார் என்னலாம். அந்நிலையில் அவர் வாழ்வு விளக்கை அணைத்தான் ஒரு பாவி! இராமநாதபுரத்தில் இருள் சூழ்ந்தது. அவ்வாறு இருள் சூழ்ந்திருந்த நேரத்திலும் சிவகங்கைச் சீமையில் சுதந்தர விளக்கு அணையவில்லை. காரணம், அப்போது சிவகங்கைச் சீமையை ஆண்ட முத்து வடுகநாதர் மாவீரர். அவர் தர்ம பத்தினியும் வீர பத்தினியுமான வேலு நாச்சியோ, வாளேந்திப் போர் புரியும் வல்லமை படைத்தவள். இவ்விருவர் இதயங்களையும் கொள்ளை கொண்ட இளஞ்சிங்கங்களே நம் மருதிருவர். தொடக்கத்தில் சிவகங்கைச் சீமையின் படைத்தலைவர்களாக வந்து சேர்ந்த இவர்கள், மிக விரைவிலேயே மன்னரும் மக்களும் போற்றும் புகழ் படைத்த நல்லமைச்சர் ஆயினர். இவ்வாறு ஆற்றல் மிக்க முத்துவடுக நாதரும், வீரத்தில் சிறந்த வேலுநாச்சியும், அறிவிலும் ஆண்மையிலும் நிகரற்ற மருதிருவரும் வாளும் கையுமாய் நாட்டைக் காவல் புரிந்து வந்த போது சிவகங்கைச் சீமை மக்கள் ஏன் அஞ்ச வேண்டும்? அந்நாளில் ஆர்க்காட்டு நவாபுவுக்கு இருந்த செல்வாக்கு அளவற்றதாகும். சென்னையை ஆண்ட கவர்னர் பீகாட்டு வாயிலாகப் பரந்து கிடக்கும் நிலப்பகுதி எல்லாம் நவாபுவின் உடைமை என்ற பிரகடனத்தை விடும்படி செய்தான் நவாபு. அவனுக்கு - அவன் தர்பாருக்கு இருந்த மகிமையைக் கண்டு அந்நிய நாட்டுச் சரித்திர ஆசிரியர்களே வியந்தார்கள். சுருங்கச் சொன்னால், குரங்கின் கையிலகப்பட்ட பூமாலை போலத் தமிழ்நாடு ஆர்க்காட்டு நவாபுவின் கையிலகப்பட்டு அலங்கோலப் பட்டுக் கொண்டிருந்தது என்னலாம். இந்நிலையில் எத்தனையோ