பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107 பேராசிரியர் ந.சஞ்சீவி கிடைத்துள்ள வாய்ப்பு அரிதானது என்றும், எனவே தொண்டைமான் அடர்ந்து கிடக்கும் காளையார் கோவில் காட்டைச் சிதைத்து எறிய ஐயாயிரம் காடு வெட்டிகளை உடனே அனுப்ப வேண்டும் என்றும் கண்டிருந்தது. நவாபுவின் கருத்தறிந்த புதுக்கோட்டையான் முந்நூறு பேரடங்கிய குதிரைப்படையையும் ஐயாயிரம் பேரடங்கிய காலாட்படையையும் கிருஷ்ணன் என்ற சர்தாரின் தலைமையில் அனுப்பி வைத்தான். துரோகிகளது படை வலியின் துணை கொண்டு கர்னல் பான்ஷோர் காளையார் கோவில் அரணைக் கடுமையாகத் தாக்கினான். அப்போது நடந்த போர் மாவீரர் முத்து வடுகநாதரோடு சேர்ந்து மருதிருவர் நடத்திய கடும்போர் - பேடியையும் போர் மறவனாக்கும் தன்மையதாகும். காளையார் கோவிலைக் காக்க அரசரும் அமைச்சரும் தோளோடு தோள் சேர நின்று வீரப்பட்டாளத்தின் துணைகொண்டு நடத்திய அப்போரில் முத்துவடுகநாதரின் வீரபத்தினியும் வாளேந்தி வெள்ளை வெறியர்களின் - அடிமைப்புத்தி படைத்த துரோகிகளின் தலைகளை உருட்டிய ஆண்மை, கோழைகளையும் வீரர்களாக்கும் வன்மை வாய்ந்தது. ஆம், முத்துவடுக நாதரின் மனைவி - வீரமங்கை வேலுநாச்சி - அன்று நடத்திய சிறப்பு வாய்ந்த வீரப்போர் வாயிலாக வேங்கடத்திற்கு வடக்கே ஒரு ஜான்சி ராணி தோன்றுவதற்கு இரு நூற்றாண்டுகட்கு முன்பே தமிழகம் தன் ஜான்சி ராணியைக் கண்டு விட்டது' என்று வரலாற்று ஆசிரியர்கள் போற்றும்படி செய்து விட்டாள்.' அரசன், அரசி, அமைச்சர்கள், ஆருயிர் மக்கள் அனைவரும் சேர்ந்து நடத்திய அப்போர் - காளையார் கோவிலைக் காக்க நடத்திய கடும்போர் - கடைசியாக வீரமுத்துவடுகநாதரின் சாவிலேயே முடிந்தது.சீ எமனும் கண்டு அஞ்சச் சுதந்தரப்போர் புரிந்த அப்பெருமகன் உயிரற்ற சவமாய்த் தமிழ் மண்ணில் சாய்ந்ததும் அரசியும் அமைச்சர்களும் அடைந்த கலக்கம் சொல்லி முடியாது படை வீரர்களும் சீமை மக்களும் அடைந்த துயரம் அளவிட்டுக் காண முடியாதது, தலையாய ஒரு தமிழ் வீரனின் தியாக இரத்தம் பட்டுப் புனிதமானோம்' என்று மண் மகள் குளிர்ந்தாள். ஆனால், 'வீரர்கள் போற்றும் வீரனை - வையகமெல்லாம் அடிமையிருளில் மூழ்கினும் நம் சீமையின் சுதந்தர ஒளி குன்றாது என்று நாம் கொண்டிருந்த நம்பிக்கைக்குக் காரணமான காவலனை - வீர சுவர்க்கத்திற்கு அனுப்பி உயிரற்ற உடல் ஆனோமே!’ என்று மக்கள் கண்ணிர் வடித்தனர்; மனங்குமுறினர். 1772-ல் சிவகங்கைச் சீமையை எதிர்த்துக் கிளம்பிய ஏகாதிபத்தியக் கடும்புயல், தன் அழிவு வேலையைப் பூரணமாகக் காட்டிவிட்டது. நடுக்கடலில் கடும்புயலில் - சிக்கிய கப்பலின் கதியாயிற்று, சிவகங்கைச் சீமையின் நிலை. கப்பல் வேறு மாலுமி வேறு என்று ஆனாற்போலச் சிவகங்கைச் சீமை வேறு வீரமங்கை வேலு நாச்சியோடு