பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 108 மருதிருவரும் வேறு என்ற நிலை உண்டாயிற்று. போர்ப்புயல் காட்டிய கடுமையின் விளைவாக நாட்டை விட்டே அரசியும் அமைச்சர்களும் அகலும் நிலை நேர்ந்தது. 'தலைவனை இழந்தோம். தமிழகத்தை - தாயகத்தை இழந்தோம்; ஆனால் இன்னும் நம் உயிரை இழக்கவில்லை. எனவே, வெளியேறுவோம்; வீரன் ஐதரின் நிழலில் சில நாள் இருப்போம்; தமிழர் படையைத் திரட்டுவோம்; மீண்டும் போரிடுவோம்; சுதந்தரம் அல்லது சாவு என்று முழங்கிக் கொண்டே புறப்பட்டனர் வேலு நாச்சியும் மருது சகோதரர்களும், காற்றாய்க் கடுகிச் சென்ற அவர்களைத் திண்டுக்கல் வரவேற்றது. ஐதரும் அகங் குளிர வரவேற்றான்." மருது பாண்டியரும் வேலு நாச்சியும் இரவு பகலாய்த் தங்கள் கண்ணினும் இனிய மக்களை நினைத்துக் கவலைப்பட்ட வண்ணம் இருந்தனர். சிவகங்கை மக்களோ, ஊன் உறக்கம் இன்றித் தங்கள் ஆருயிரினும் இனிய அரசியையும் இரு கண்கள் அனைய மருது சகோதரர்களையும் எண்ணி எண்ணி ஏங்கிய வண்ணம் இருந்தனர். போருக்குப் பின் சிவகங்கைச்சீமை குத்தகைக்கு விடப்பட்டது ஆம். சுதந்தரப் பூமியில் அடிமை ஆட்சி தலை விரித்தாடியது