பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 110 என்றாலும், மருது பாண்டியர் தன் சாதியினர் அல்லர் சேர்வைக்காரர் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதை அவள் அறிவாள். எனினும், நாடாள வேண்டுவது சாதியன்று அறிவும் ஆண்மையுமே" என்று அவள் கருதினாள் குடிமக்களுக்கும் மாவீரர் மருது பாண்டியர் மகராசர் ஆவதில் தடையொன்றுமில்லை; அவர்கள் களிப்பே அடைவார்கள் என்பதையும் உணர்ந்தாள். சுற்றி இருக்கும் பகை நெருப்புக்குச் சிவகங்கைச் சீமை இரையாகாதபடி அதைக் காப்பாற்றி வாழ்விக்கத் தன்னினும் மருது சகோதரர்களே ஆயிரம் மடங்கு வல்லவர்கள் என்று அவள் உளமார உணர்ந்த உணர்வு ஓர் உயில் சாசனமாய் உருக்கொண்டது." அதன்படி சீமை பெரிய மருது பாண்டியரின் உடைமையாயிற்று. ஆட்சி மாறினும் தங்கள் சீமையின் மாட்சி சிறிதும் மாறாது என்று மக்கள் திடமாக நம்பினார்கள். அந்த நம்பிக்கைக்குச் சிறிதும் கேடு சூழவில்லை நம் மருது சகோதரர்கள். சீமை தங்கள் கைக்கு வந்ததும் சகோதரர்கள் தங்கள் பொறுப்பினை உள்ளினார்கள். எவ்வளவு பெரிய பொறுப்பு என்று எண்ணினார்கள், நேர்மையும் நியாயமும் வீரமும் தியாகமும் நம் ஆட்சியை மக்களின் அன்புக்கு உரியதாக்கும்' என்று நம்பினார்கள். அவர்கள் தொட்ட காரியம் பொன்னாகியது. சிவகங்கையின் வரலாற்றில் மருதிருவர் ஆட்சிக்காலமே அறம் மலிந்த பொற்காலமாய்ப் பொலிந்தது. சிவகங்கைச்சீமை நிருவாகத்தில் முக்கியப் பங்கு சின்ன மருதுவுக்கே இருந்தது. வழக்கம் போலத் தன் இயற்கைச் சுபாவப்படி பெரிய மருது காட்டு ராஜாவாகவே காலங் கழிப்பதில் மகிழ்ச்சி கொண்டார். சின்ன மருதுவே நடை முறையில் நாட்டு ராஜாவாய் இருந்து குடிபடைகளின் நலங்களை எல்லாம் தாயுள்ளத்தோடு கவனித்து வந்தார். நாட்டின் நிருவாகத்தை ஏற்றதும் பெரிய மருதுவின் முன் நின்ற முதற்பிரச்சனை, நவாபுவுக்குக் கட்டப்பணம் எங்கே?' என்பதே. பணம் திரட்டப் பெருமுயற்சிகள் புரிந்தார்கள் மருது சகோதரர்கள்." திருவிதாங்கூர் வரை சென்று அந்நாட்டு மன்னனிடம் கடும்புலியைக் கைவளரி ஒன்றே துணை கொண்டு போராடிக் கொன்றும், இன்னும் பல வீரச் செயல்கள் புரிந்தும் தங்கள் வீரத்தை வெளிப்படுத்தினார்கள் என்றும், சகோதரர்களின் பேராற்றலைக் கண்டு மகிழ்வுற்ற கேரள மன்னனிடம் பெரும் பொருளைப் பரிசிலாகவும் கடனாகவும் வாங்கி வந்தார்கள் என்றும் கூறுவார்கள். எட்டாண்டுகளாய் (1772-1780) சிவகங்கைச் சீமையில் நல்லாட்சி நடைபெறவில்லை என்பதை நாம் அறிவோம். இந்த எட்டு ஆண்டுகளிலும் நவாபுவின் குத்தகைக்காரனால் சிவகங்கைச்சீமையிலிருந்து செல்லாக்காசும் வசூலிக்க முடியவில்லை. இதை அறிந்த நவாபு கறுவிக் கொண்டிருந்தான், கம்பெனிப்பேய்க்குத் தூபம் போட்டான். பேயும் ஆட ஆரம்பித்தது. அந்தப் பேயாட்டம் கர்நாடகத்தில் வெறிகொண்டு திக்குவிஜயம் செய்யப்