பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115 பேராசிரியர் ந.சஞ்சீவி 11. அலையான் குளத்தில்: இராமநாதபுரம் தாலுக்காவிலுள்ள அலையான் குளத்தில் மருது பாண்டியரால் ஏற்படுத்தப்பட்ட பிள்ளையார் கோவில் ஒன்று உள்ளதென்றும், விநாயகர் கோவில்களுக்கெல்லாம் அது முதன்மை வாய்ந்தது என்றும் மொழிவர். 12. நரிக்குடியில்: மருதரசர் தமது சொந்த ஊராகிய நரிக்குடியில் அன்னதான மருது விநாயகர் கோவிலையும் அழகிய மீனாம்பிகை கோவிலையும் கட்டிப் பாண்டியன் கிணறு என்ற ஒரு கிணற்றையும் ஏற்படுத்தினர் என்பர். 13. திருப்பாச்சேத்தியில்: இவ்வூரிலுள்ள சுந்தரவல்லியம்மன் கோவிலிற்கு மருதரசர் மரகதப் பச்சையில் சிவலிங்கம் செய்தளித்தாராம். அது இன்றும் அக்கோயிலில் வைத்து வழிபடப்பட்டு வருகிறது. 14. திருக்கோஷ்டியூர்: மருதரசர் சைவ சமயக் கோவில்கட்கு ஏராளமான திருப்பணிகள் செய்திருப்பது போலவே, வைணவக் கோவில்கட்கும் வேண்டும் அளவு திருப்பணிகள் புரிந்துள்ளார். சிறந்த வைணவ ஸ்தலமாகிய திருக்கோஷ்டியூர் கோவில் - குளம் முதலியவற்றைப் புதுப்பித்துத் தேரும் செய்வித்தாராம் மருது பாண்டியர். 15. பூரீவில்லிபுத்துர் பூரீவில்லிபுத்துர்க் கோவிலுக்கு மருதரசர் தேர் செய்து விட்டார் என்பர். 16. திருமோகூர் மருதரசர் உள்ளங் கவர்ந்த வைணவக் கோவில்களுள் தலை சிறந்தது இக்கோவில் என்பது தெரிகிறது. சிவகங்கைச் சீமையில் ஒரு சமயம் கள்வர் பயம் மிக அதிகமாய் இருந்ததாம். இந்நிலைமையை மாற்ற நினைத்த மருதரசர், இரண்டாயிரம் வீரர்களுடன் மதுரைக்கு வட கிழக்கில் ஆறுமைல் தொலைவிலுள்ள ஆனைமலைக்கு அப்பால் கள்வர்களை விரட்டி அடித்துவிட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்தாராம். வரும் வழியில் திருமோகூரில் தங்கினாராம். அங்குள்ள அழகிய திருமால் கோவிலையும் அதில் எழுந்தருளியுள்ள கார்மேகப் பெருமாளையும் கண்டு கண்ணும் கருத்தும் குளிர்ந்தாராம்; ஆதிபாண்டியர்களால் கட்டப்பட்ட அக்கோவில் அப்போது பழுதுற்ற நிலையிலிருந்தது கண்டு உள்ளம் நொந்து, மருதரசர் உடனே அக்கோவிலின் முன் மண்டபத்தைக் கவினுறக் கட்டி முடித்தார் என்பர். கோவில் பூசை முதலிய காரியங்கட்குப் பார்த்திபனுரை அடுத்த மாங்குடிக் கிராமத்தையும் சிவகங்கைக்கு மேற்கேயுள்ள மானாகுடி என்ற கிராமத்தையும் மானியங்களாக விட்டாராம். குன்றக்குடிக் கோவிலில் இருப்பது போலவே ஈண்டும் மருது சகோதரர்களின் சிலைகள் உள்ளன அவற்றோடு தூண்களில் இரு புறங்களிலும் மருதரசர் மக்களின் சிலைகளும் உள்ளன.