பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 120 கருமணியும் சிறிதும் தீக்கிரையாகா என்றாள். பத்தினியின் பேச்சுக்கு மறு பேச்சு இல்லை. அவள் சொல்லியபடியே காரியங்கள் நடந்தன. கற்பரசி தாமரைப் பொய்கையில் புகுவது போலத் தழலிடைப் புகுந்தாள். அனைத்தும் சந்தனச் சாம்பலாயின. ஆனால், அவள் அணிந்திருந்த சேலையும் காதோலையும் கருமணியும் மட்டும் அக்கினித் தேவன் வயப்படாது வெளியே விழுந்தனவாம். தீப்பாய்ந்த தெய்வத்தின் மாண்பைக் கண்ட மருதரசர், தம்பி, எங்கிருந்தோ வந்த இவள், நாம் வழிபடும் தெய்வம் வீட்டில் இப்பொருள்களைப் பத்திரமாகவை, என்று சின்ன மருதுவிடம் கூறினாராம். ஆண்டுகள் பலவாகியும் இன்றும் முக்குளத்தில் மருதரசர் வாழ்ந்த மனையென்று போற்றப்படும் இல்லத்தில் இப்பொருள்களை வைத்துச் சிறப்பாக மகளிர் வழி பாடாற்றி வருகின்றனர்.” மருதுபாண்டியர் மக்களின் உயிர்-தெய்வம்: மருது பாண்டியர்களை அந்நாளைய மக்கள் தங்கள் உயிர் போலப் போற்றினார்கள். அவர்கள் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதே அல்லும் பகலும் மக்கள் செய்து வந்த பிரார்த்தனை. இந்த உண்மையை வெள்ளைத் துரைகளே நேரில் கண்டு ஒளியாமல் கூறியுள்ளார்கள்.’ இவ்வாறு குடிகளின் நெஞ்சையெல்லாம் கொள்ளை கொண்ட மருதுபாண்டியர் பெயரை மக்கள் பயபத்தியுடனே போற்றி வந்தார்கள். எங்கள் ஐயன், அரசன், அப்பன், என்று மருதுபாண்டியரைக் குறிப்பிடுவதில் அவர்களுக்கிருந்த ஆர்வம் சொல்லிலடங்காது. தமிழ் நாட்டு மரங்களுள் பழைமை சான்ற மரம் மருதமரம். இம்மரங்கள் நிறைந்த நிலப்பகுதியை மருத நிலம் என்றே புலவரும் மக்களும் போற்றினார்கள். அம்மருத நிலம் ஐவகை நிலங்களுள் ஒன்றன்றோ வையை பாயும் வளநாட்டிலும் மருதமரங்கள் ஏராளமாய் உண்டு. வையை ஆற்றின் தென்கரையிலுள்ள சிறந்த ஒரு தலம் - பாடல் பெற்ற ஊர் - திருப்பூவனம் ஆகும். இவ்வூரில் மருது பாண்டியர் காலத்தில் ஒரு பெரிய மருதமரம் இருந்தது. காளையார் கோவில் கோபுரம் கட்டிய களிப்பில் மூழ்கியிருந்த மருதரசர், அக்கோயிலுக்காகப் பெரியதொரு தேர் செய்விக்க வேண்டுமென்று பேராவல் கொண்டார் நாடெங்குமுள்ள சிற்பிகளைப் பறை அறைந்து விரும்பி அழைத்தார். மிகப் பெரிய தேருக்கு உறுதியான அச்சு மரம் வேண்டுமல்லவா? அந்தக் கவலை அரசருக்கும் ஏற்பட்டது. திருப்பூவனத்திலுள்ள பெரிய மருத மரத்தின் நினைவு அவருக்கு வந்தது. உடனே மிக்க மகிழ்ச்சியோடு ஆள்களை அனுப்பி அதை வெட்டிக் கொணரும் படி கட்டளையிட்டார். ஏவலாளிகள் சென்றார்கள். மரத்தை வெட்ட முனைந்தார்கள். ஆனால், என்ன அதிசயம்! ஒர் அர்ச்சகர் அம்மரத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டு, "என் உயிர் போனாலும் இதை