பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125 பேராசிரியர் ந.சஞ்சீவி வேண்டுமென்று உடனே கொண்டுவரும்படி சிவிகையைச் சிறுகம்பையூருக்கு அனுப்பிவிட்டனர். இராச திருட்டியாகுமே!’ என்று பயந்த புலவர், தாம் ஊருக்குப் போய்க் குழந்தையை அனுப்புவதாய்ப் பன்முறை கூறியும் பார்க்க வேண்டுமென்னும் அவா.மேலீட்டாற் புலவர் சொல்லை மறுத்து விட்டனர் பாண்டியர். பின்னுஞ் சிறிது போதுக்குள் ஐந்து கடிகைத் துரத்திலுள்ள சிறுகம்பையூரிலிருந்த குழந்தை பல்லக்கில் வந்து சேர்ந்தது. வரவறிந்த பூபதி குழந்தையைத் தழுவி, இதிற்குட்டி நாகம் வரைந்து பாட்டெழுதினவர் யாவர்?’ என்று கேட்க, எழுதினவன்யானே, என்று துடுக்காய்ச்சொல்லவே, பாண்டியர் அடங்காப் பெருமகிழ்வுற்று. 'கவிராசரே, இன்று முதற் குழந்தை என்னருகில் இருக்க வேண்டும்,' என்று சொல்லிவிட்டனர். புலவர் திகைத்து வருந்திச் சிறிது தேறி, ‘அரசே, குழந்தை இலக்கிய இலக்கணங்கள் படித்து வருகின்றமையால், ஒருவாறு முற்றிய பின் நானே கொண்டு வந்து சமுக வித்துவானாக இருக்கச் செய்து வைக்கிறேன், என வேண்டினர். குழந்தை இப்பொழுதே பெரும்புலவர்தான் இன்னும் புலவராக்க விரும்பினால், கூட நீங்களும் வந்திருக்கலாகும்; அன்றேல், என்னருகிலுள்ள வித்துவான்களைக் கொண்டு படிப்பித்தலுமாகும் என்று சொல்லிய பின்னரும் மறுத்தற்கஞ்சிய புலவர், விசுவாமித்திர முனிவர் கையில் பூநீராமபிரானைப் பிடித்துக் கொடுத்த தசரதனைப் போலக் கலக்கமுற்றுத் தம்மூர் போய்ச் சேர்ந்தனர். அப்போது சாந்துப் புலவருக்கு வயது பதினாறு. 'அன்று முதற் சாந்துப்புலவரை யாவரும் அரண்மனைக் குழந்தையென்று வழங்குவாராயினர். குழந்தை மருது பாண்டியருடைய புகழென்னுந் தொட்டிலிலாடி, அவரது சங்கப் புலவர்களென்னுங் செவிலியானுங் கல்வியமுதுட்டப் பெற்றுக் கவிச்சிரோரத்தினமென்று பெரும்புலவர்களெல்லாங் கொண்டாடும்படி, பல சித்திரங்களும் அமைய நிமிஷ கவி பாடுவதிலும், பிரசங்கஞ் செய்வதிலும், நாவன்மையுடையவராய் நடுநாயகமாய்ச் சிறந்து விளங்கியதன்றி, மருது பாண்டியருக்குக் க்ண்ணுங் கவசமுமனையராய்ப் பிரதிநிதியாயுமிருந்து இராசாங்கக் காரியங்களை நிருவகித்து வந்தனரென்றுங் கூறுப. இது சிறப்புப் பாயிரச் செய்யுளில், எங்களிந்திரன் சாந்து மகிபால வாலக வீச்சுரனே, என்பதனாலும் வலியுறுகின்றது." மருது பாண்டியர் அவையிலிருந்த தமிழ்ப்புலவர் பலர் என்பதை முன்பே கண்டிருக்கிறோம். அவர்கட்கு எல்லாம் திலகமாய் - தலைவராய் விளங்கியவர் நம் சாந்துப் புலவரே. இவர்க்கும் இவரோடு அந்நாளில் தம் அவையில் இருந்த தமிழ்ப் புலவர் பலர்க்கும் மருதரசர் பல கிராமங்களை முற்றுட்டாக அளித்துப் போற்றினர் என்பது, அந்நாளில் தம்பிப் பட்டியிலிருந்தவரும் வாலசரஸ்வதி' என்ற பாராட்டைப் பெற்றவருமாகிய முத்துவேலுக்கவிராசர் பாடிய பாடல்களால் புலனாகிறது."