பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 126 சாந்துப் புலவர் பாடிய இம்மயூரகிரிக்கோவை குன்றக் குடியில் கோவில் கொண்டுள்ள பெருமானாகிய ஆறுமுகக் கடவுளைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்ட சிறப்புடையதாகும். குன்றக் குடியில் அமர்ந்த குமரப்பெருமான் பால் மருதரசருக்கு அளவிலாப் பத்தி தோன்றக் காரணம் யாதென்பதைச் சுருக்கமாக முன்பே கண்டிருக்கிறோம். இப்போது அவ்வரலாற்றின் விரிவை மருதரசர் மனத்தையே கோவிலாகக் கொண்ட சாந்துப் புலவரின் கால்வழியில் தோன்றிய சர்க்கரை இராமசாமிப் புலவரே கூற அறிவோம். 'இத்தகைய மாட்சிமை பெற்றிருந்த மருது துரையருகில் இவர் மேற்கூறியவாறு அமரும் நாளிற் பூபதிக்கு இராஜபிளவை புறப்பட்டுப் பல மணி மந்திர மாதிய வைத்தியங்களால் அநுகூலமாகாமல் மிகவும் வருந்துவாராயினர். அப்போது ஒரு முதியவர் பூபதியை நோக்கி, ‘அரசே, கலியுக வரதராகிய சுப்பிரமணியக் கடவுளுடைய பக்தர்களால் விபூதி போடப்பெறின் அதுகூலமாம்,' என்று சொல்லக்கேட்ட பாண்டியர், அங்ங்னமாயின் அத்தகையார் யாவர்?' என்று வினவ, நாட்டுக்கோட்டைச் செட்டிப் பிள்ளைகளுக்குக் குமரக் கடவுள் பிரசன்னமுள்ள குலதெய்வமாகலால், அவர்களுள் எவரேனும் விபூதி போடுவது நலம், என்றுரைக்கவே, அத்தகைய செட்டியாரொருவரைக் கொண்டு வருக, என்று உத்தரவளித்தனர். 'உத்தரவுப்படி சென்ற ஏவலாளர், எருத்துமாட்டிலேற்றிய உப்பு வியாபாரியாய் எதிர்ப்பட்ட காடன் செட்டியார் என்பவரை அழைத்து வந்து பாண்டியர் முன்பு விட, விடப்பட்ட செட்டியார், 'யாதாமோ என்று அச்சமுற்றயருங் குறிப்பறிந்த பாண்டியர், முகமன் கூறி, உமது குலதெய்வமாகிய சுப்பிரமணியக் கடவுளுக்குப் பிரார்த்தனை பண்ணி, யானிப்பிளவையால் வருந்தாது பிழைக்கும் வண்ணம் விபூதியளிப்பீராக! என வேண்டச் செட்டியார் சிறிது மனந்தெளிந்து, இந்த மருது பாண்டியருக்கு அநுக்கிரகம் பண்ணி என்னை இவ்விடத்தினின்றும் விடுவிக்க வேண்டுஞ் சண்முக நாதா, எனச் சிந்தித்து விபூதியுதவிய பின்பு, பாண்டியர் அருகிருந்தவரை நோக்கிச் செட்டியாருக்கு உண்டி முதலியன அளித்து உபசரித்து வைத்திருங்கள், என்று கட்டளையிட்டவாறு உபசரிக்கப் பெற்றும் செட்டியார் அச்சமுடையவராய்ச்சண்முகக் கடவுள் திருவடிகளைத் தியானித்திருந்தனர். அப்பால் வெகுநாளாய் நித்திரையில்லாமல் வருந்திய பூபதி அன்றிரவு அயர்ந்து தூங்கும்போது பால சந்நியாசியார் ஒருவர் மயிற்றோகையுடன் வந்து தம் பிளவையைப் பிதுக்கி ஆணியெடுத்து வாழையிலையில் வைத்துவிட்டுப் பிளவை வாயில் விபூதியை வைத்ததாகக் கனவு கண்டு வெருண்டு எழுந்து பார்க்கும் போது அச்செயல்