பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 132 இருபதாயிரம் வீரர்கள் வரை உயிரைப் பலிகொள்ளும் போராய் முடிந்திருக்கும் என்று கூறும் வாசகம் நம் சிந்தனைக்கு உரியது." இவ்வாறு புதுக்கோட்டைத் தொண்டைமான் ஒருபுறம் சச்சரவுகளை விளைவித்துக் கொண்டிருக்க, இன்னொரு புறத்தில் சிவகங்கைச் சீமையின் வலிமையைக் குலைக்க ஆர்க்காட்டு நவாபு படை திரட்டிக் கொண் டிருந்தான். கறுவிக்கொண்டே இருந்த அவன் கடைசியாக 1789-ஆம் ஆண்டில் புதுக்கோட்டைத் தொண்டைமானின் படைத்துணையையும் பயன்படுத்திக் கொண்டு, சிவகங்கைமீது படையெடுத்தான் இப்படை யெடுப்பை வழக்கம் போல வெள்ளைத் தளபதி ஒருவன் தலைமையிலேயே நடத்தினான். பல ஆண்டுகளாக இப்படையெடுப்புக்கு நவாபு திட்டமிட்டிருந்தான் என்பது வரலாற்றுச் சான்றுகளை ஆராயும்போது நமக்குத் தெளிவாகிறது. 1786-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலேயே வெள்ளைக் கம்பெனிக்கு நவாபு ஒரு கடிதம் தீட்டினான். அதில் அவன் வெள்ளை ஆட்சி சிவகங்கைச் சீமைக்கு எதிராகக் கத்தி தீட்ட வேண்டும் என்பதைத்தான் எவ்வளவு திறமையாக வாதித்திருக்கிறான் வேலு நாச்சியின் பாதுகாப்பில் இருந்த ஓர் அரசனை மருது பாண்டியர் கைது செய்து வைத்துள்ளனர் என்றும், இராமநாதபுரம் சேதுபதி மீது பகைகொண்டு அவன் ஆள்களில் பலரை மருது சகோதரர் கொன்று குவித்துவிட்டனர் என்றும், மருதிருவர் போக்குக் கடுமையும் கொடுமையும் நிறைந்ததாய் இருக்கிறது என்றும் தன் கடிதத்தில் குறைபட்டுக் கொண்டான் நவாபு, மீண்டும் 1788 ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் அவன் எழுதிய கடிதத்தில் சாலைகளை எல்லாம் அடைத்து விட்டுத் தன் நாட்டிற்குள் நுழைந்த தபாற்காரர்களையும் வழிப்போக்கர் களையும் சின்ன மருது கொலை புரிந்து விட்டார் என்றும், நெடுங்காலமாகக் கப்பம் கட்டாமல் காலங்கழிக்கின்றார் சிவகங்கைத் தலைவர் என்றும், அவரை அடக்கப் பலம் பொருந்திய ஆங்கிலப்படை உடனடியாகத் தேவை என்றும் தன் நலம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்ட ஆர்க்காட்டு நவாபு தமிழகத்தை அடிமைப்படுத்தத் தன்னுடைய கை நோக்கியிருக்கும் ஆங்கிலப் படைக்கு அழைப்பு விடுத்தான். கொக்குப் போலத் தமிழகத்தின் இருதயத்தில் குத்தத் தவமிருந்த கம்பெனி அதிகாரிகள் வலிய வந்த இந்த அழைப்பை வீணாக்கிவிடுவார்களா? நவாபுவின் கடிதம் கண்டதும் அவர்கள் நாவில் நீரூறியது. 'திறமை மிக்க தளபதி ஸ்டூவர்ட்டின் தலைமையில் பெரும்படை ஒன்று சிவகங்கைச் சீமைக்குள் நுழையும்' என்று பதில் எழுதினர் கம்பெனி அதிகாரிகள் ஆர்க்காட்டு நவாபுவுக்கு. அளவில்லா மகிழ்ச்சி கொண்ட நவாபு சென்னைக் கவர்னருக்கு நன்றி தெரிவித்துக் கடிதம் வரைந்தான். அதில் கவர்னர் முடிவு அறிந்து தன் சிந்தை குளிர்ந்ததையும் வெள்ளைப் படை வரும் செய்தியைத் தொண்டை