பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 பேராசிரியர் ந.சஞ்சீவி மானுக்கும் இராமநாதபுரச் சேதுபதிக்கும் மதுரையில் உள்ள தன் அதிகாரிக்கும் அறிவித்துவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தான். கர்னல் ஸ்டூவர்ட்டும் தன் படை இன்னும் மூன்று நாள்களில் புதுக்கோட்டைச் சீமைக்கு வந்துவிடும் என்றும், அப்படைக்கு எல்லா உளவுகளையும் கூறித் தக்க வசதிகள் அனைத்தையும் செய்துதர வேண்டும் என்றும் தொண்டைமானுக்கு 1789-ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி கடிதம் வரைந்தான். வெள்ளைத் தளபதியின் கடிதம் கண்ட தொண்டைமான் விழுந்து விழுந்து தன் கடமைகளைச் செய்து முடித்தான். 1789-ஆம் ஆண்டு ஏப்பிரலில் கர்னல் ஸ்டூவர்ட்டுத் தொண்டைமானுக்கு எழுதிய கடிதத்தில் தொண்டைமான் தன் வக்கீலாகிய கோட்டையா ஆச்சாரி வாயிலாகப் படைக்கு வேண்டிய பொருள்களை எல்லாம் வழங்கத்தக்க ஏற்பாடுகள் செய்திருப்பதையும் திருமயத்தில் தொண்டைமான் படை எந்நேரத்திலும் போருக்குப் புறப்படத் தயாராய் இருப்பதையும் தான் அறிந்து மிக்க மகிழ்ச்சியுற்றதாக எழுதியுள்ளான். இன்னும் ஒரு கடிதத்தில் கர்னல் ஸ்டூவர்ட்டுப் புதுக்கோட்டையைச் சேர்ந்த திருமயத்தில் தாசில்தார் போருக்கான உதவிகளைப் புரிவதில் கம்பெனி ஊழியனைப் போலவே நடந்து கொண்டது பாராட்டற்குரியது என்றும், கூடிய விரைவில் தொண்டைமான் தன்படை வீரர்களைத் திருப்பத்துருக்கு அனுப்பினால் அவர்கட்குப் போர் முறைகளைப் பற்றிய பயிற்சியை அளிப்பதாகவும், தொண்டைமான் போர் முனைக்குகந்த படை வீரர்கட்கு வேண்டிய பொருள்களை விற்குமாறு தன் சீமையில் உள்ள கடைக்காரர்களுக்கு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்றும் எழுதியுள்ளான். மேலும், அவன் தொண்டைமானிடமிருந்து முந்நூறு மண் வெட்டிகளையும் மற்றும் பல தளவாடங்களையும் வேண்டியதாகவும் தெரிகிறது. தொண்டைமான் வெள்ளைத் தளபதியின் விருப்பங்களை எல்லாம் முகம் சுளிக்காமல் நிறைவேற்றி வைத்தான். ருசி கண்ட வெள்ளைப் பூனை தொண்டைமான் செய்த இவ்வளவு உதவிகளோடு திருப்த்தி கொள்ளுமோ? தொண்டைமானிடமிருந்து வேண்டிய அளவு உணவுப் பொருள்களையும் ஆட்டுக் கிடாய்களையும் வாங்கி விலாப்புடைக்கத் தின்றது கர்னல் ஸ்டூவர்ட்டின் படை வளமான தீனி தின்று கொழுத்த வெள்ளைப்படை 1789 ஆம் ஆண்டு மே மாதம் சிவகங்கைக்கு அருகில் உள்ள கொல்லங்குடியைக் கைப்பற்றியது; ஜூன் 2-ஆம் தேதி காளையார் கோவிலையும் பிடித்தது." பலம் பொருந்திய வெள்ளைப்படையை எதிர்த்து நின்று தமக்கும் தம் நாட்டிற்கும் சேதத்தை விளைத்துக் கொள்வதைவிடப் பேய்க்காற்றுக்கு வளைந்து கொடுத்துப் பின்னர் நிமிர்ந்து கொள்ளும் நாணலாய் இருக்க விரும்பினர் போலும் மருது பாண்டியர் ஆறு மாதம் அவர்கள் அஞ்ஞாத வாசம் நடந்தது. நாட்டின் பொருட்டு எவ்வளவு அல்லல்களைப்