பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 134 படவேண்டுமோ, அவ்வளவு அல்லல்களையும் பட்டு அனுபவித்துத்தானே ஆக வேண்டும்? ஜெனரல் ஹேர்ன் என்பவன் எழுதிய அறிக்கை ஒன்று வாயிலாக மீண்டும் 1789 நவம்பர் தொடங்கிச் சின்ன மருது நிருவாகம் சிவகங்கைச் சீமையில் தொடர்ந்து நடந்தது என்பது தெளிவாகிறது. இம்முறை சிவகங்கை மீது படையெடுத்து வந்த கர்னல் புல்லர்ட்டன், தனக்குத் தொண்டைமான் ஆட்டிறைச்சி முதலாக எல்லாப் பொருள்களையும் தந்துதவிய தகைமையினை நன்றியுள்ளத்தோடு பாராட்டத் தவறினான் இல்லை. போர் அரக்கனின் கோரப் பற்களினின்றும் சிவகங்கைச் சீமையைக் காப்பாற்றிய மருது பாண்டியரால் அதற்குப் பின் பதினோர் ஆண்டுகள் அமைதியாக ஆட்சி செய்ய முடிந்தது. 1801 ஆம் ஆண்டில் சிவகங்கைச் சீமையின் சுதந்தர வாழ்வை - மருது பாண்டியரின் இன்னுயிரைக் கொள்ளை கொள்ளும் ஏகாதிபத்தியக் கொடும்போர் தொடங்கிவிட்டது. வயிறு வளர்க்க வந்த ஒரு சிறு கூட்டம் - சில மைல் விஸ்தீரணம் உள்ள பூமியைத் தமிழகத்தில் வாடகைக்கு வாங்கக் கையேந்தி நின்று பிச்சை கேட்ட கூட்டம் - ஏகாதிபத்திய வெறிகொண்டு தமிழகத்தின் சுதந்தரத்தையே சூறையாட முனைந்தது யார் பலத்தால்? தமிழகத்திலேயே பிறந்து தமிழகத்தையே காட்டிக் கொடுக்க எப்போதும் தயாராய் இருந்த ஆர்க்காட்டு நவாபுவின் அடிமைப் புத்தியாலும் தொண்டைமானின் துரோக சிந்தையாலுமே ஆகும். வரலாற்று வழியாக இவ்வுண்மையை நிறுவ வல்ல எத்தனையோ சான்றுகளைப்பதினெட்டாம் நூற்றாண்டுத் தமிழகத்தின் சரித்திரம் நமக்கு வாய் திறந்து சொல்லுகிறது. கடற்கரை நகரமாகிய புதுவையைக் கைப்பற்றியது காரணமாக ஆங்கிலேயரின் ஆட்சி உச்சநிலையை அடைந்தது என்றும்; கர்நாடகத்தில் அவர்கள் அதிகாரம் வேரூன்றியது என்றும், நாம் முன்பே பார்த்து இருக்கிறோம். இதன் விளைவாக ஆர்க்காட்டு நவாபு முகம்மதலி ஆங்கிலேயர் கையில் ஒரு சிறு கைப்பாவை ஆனான். கர்நாடகத்தைக் காப்பாற்றும் பொறுப்பு வெள்ளையர் வசமாயிற்று. ஆயினும், அப்பொறுப்பை நவாபுவின் கஜானாவிலிருந்தே நிறைவேற்ற வேண்டிய நிலைமைதான் வயிறு வளர்க்க வந்த கிழக்கிந்தியக் கம்பெனிக்கு இருந்தது. ஆர்க்காட்டு நவாபுவோ, வீணான ஆரவாரச் செலவுகளால் பெருங்கடனாளியானான். ஒவ்வொரு மாவட்டத்திலும் அவனுக்கு இருந்த கடன் சொல்லி முடியாது. கடனாளி நவாபு அவன் சிப்பந்திகளாலேயே கிள்ளுக்கீரையாக மதிக்கப்பட்டான். சுலபமாகக் கட்டாயப்படுத்தி ஆங்கிலேயர்கள் செங்கற்பட்டு ஜில்லாவை அவனிடமிருந்து பறித்துக் கொண்டார்கள். மண்ணைப் பறித்ததுமன்றி. ஆர்க்காட்டு நவாபு ஏராளமான பொன்னையும் தரவேண்டும் என்று பரதேசி வெள்ளையர் எதிர் பார்த்தனர்.