பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135 பேராசிரியர் ந.சஞ்சீவி பிரெஞ்சியர்களை எதிர்த்து அவர்கள் நடத்திய போர், ஆர்க்காட்டு நவாபுவைக் காப்பதற்காகவும் கர்நாடகத்தைப் பிரெஞ்சுக் கொடுங்கோன்மையினின்றும் தப்புவிப்பதற்காகவுமே என்று வாதாடினார்கள் ஆங்கிலக் கொடுங்கோலர்கள்." நவாபு முகம்மதலியோ, எவ்விதச் சுயமரியாதையும் அற்றவனாய்த் தன் தலைநகராகிய ஆர்க்காட்டைத் துறந்துவிட்டு, சுகபோக வாழ்க்கை நடத்துவதற்காகச் சென்னையிற்குடிபுகுந்து வெள்ளை அதிகாரிகளுடன் சிங்கார வாழ்வு வாழ ஆரம்பித்தான். நாட்டின் பணம் அவன் கையால் நானா வழிகளிலும் பாழாகியது. வாங்கிய கடன்களை ஒழுங்காகத் திருப்பிக் கொடுக்கும் வல்லமை அவனுக்குச் சிறிதும் இல்லை. தன் மக்களிடமிருந்து வசூலித்த வரிப்பணத்தை எல்லாம் கடனுக்காக ஈடு காட்டினான் முகம்மதலி, அவன் கடன் வாங்குவதும் வெள்ளை முதலாளிகளிடமிருந்தே. இதற்குக் காரணமாக இந்தியர்கள் அதிக வட்டி கேட்கிறார்கள் என்று அவன் சாக்குக் கூறினான். முகம்மதலியினுடைய நிலை இவ்வளவு மோசமாய் இருந்த காலத்தில் ஐதர் அலியின் படையெடுப்பும் கர்நாடகத்தை - தமிழகத்தை பயமுறுத்தியது. ஏற்கெனவே ஊழலுக்கு உறைவிடமாய் இருந்த கிழக்கிந்தியக் கம்பெனியோடு ஆர்க்காட்டு நவாபுவின் போக்கும் சேர்ந்து நாட்டை மீட்க முடியாத அபாயத்திற்குக் கொண்டுபோய்க் கொண்டிருந்தது."சம்பளமில்லாமல் வேலை செய்யோம்; ஐதர் அலியோடு சேர்வோம்; சதி செய்வோம்' என்று பயமுறுத்தினர் நவாபுவின் படை வீரர். நவாபுவுக்கோ, கடன் வாங்குவதில் இருந்த கருத்தும் களிப்பும் வாங்கிய கடனைத் திருப்பித் தருவதில் எள்ளளவும் இல்லை. அடைமானப் பத்திரங்களை அடுக்கடுக்காக எழுதிக் கொடுத்து ஆயிரக்கணக்கில் பணத்தை வாங்குவது அவனுக்கு அளவில்லா மகிழ்ச்சியை அளித்தது." இந்த நிலையில் 1781-ல் நவாபு ஒர் அருமையான ஒப்பந்தத்தை ஆங்கிலக் கம்பெனியோடு செய்து கொண்டான். வெள்ளையரின் வற்புறுத்தலின் பேரில் செய்து கொள்ளப்பட்ட அவ்வொப்பந்தத்தின் சாரம் கர்நாடகத்தின் வருமானத்தின் ஆறில் ஒரு பங்கை வாங்கிக் கொண்டு எஞ்சிய தொகையை எல்லாம் கிழக்கிந்தியக் கம்பெனிக்கே கொள்ளை கொடுப்பது என்பதே." இவ்வளவு மோசமான நிலையில் மைசூர் யுத்தமும் ஒரு புறம் மக்களைச் சொல்லொணாத் துன்பங்கட்கு இரையாக்கியது. இவ்வாறு பல வகையாலும் பாழ்பட்டுக் கிடந்த கர்நாடகத்தின் நிலை குறித்து டாக்டர் கால்டுவெல் தம் நூலுள் விளக்கியுள்ளார். அதன் சுருக்கம் வருமாறு:" எண்ணற்ற பாளையக்காரர் சண்டை ஏற்படுவதற்கும் இறுதியாகக் கர்நாடகம் கிழக்கிந்தியக் கம்பெனியிடம் ஒப்படைக்கப்பட்டதற்கும் ஏதுவாய் இருந்த காரணங்களைப் பற்றி அறிவதற்கு 1781 முதல் 1801 வரை இருந்த அரசியல் நிலை பற்றி, அதாவது கிழக்கிந்தியக் கம்பெனி