பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 138 கலந்து கொண்டனர். அவர்களுக்குத் தலைமை தாங்கினான் வீரபாண்டியக் கட்டபொம்மன். புரட்சியில் கலந்து கொண்ட அத்தனை பாளையக்காரர்களும் வானம் பொழியுது. பூமி விளையுது. மன்னவன் காணிக்குக் கிஸ்தி ஏது? என்று வாளை உருவி, வான் அதிர விடுதலைக் குரல் எழுப்பினார்கள். நவாபுவின் கால்கள் நிலத்தில் ஊன்ற முடியாமல் நடுங்கின. சென்னை அரசாங்கம் செய்வது அறியாமல் சிந்தை தடுமாறியது. நயத்தாலும் பயத்தாலும் வீரபாண்டியனைப் பணிய வைக்க பிரிட்டிஷ் அரசாங்கம் எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் வீணாயின. வீரபாண்டியனின் விடுதலை வேட்கை ஈனர்களின் பசப்பு மொழிகளால் தனிக்க ஒண்ணாததாய் இருந்தது. வீரபாண்டியனை அடக்கப் போர் ஒன்றுதான் வழி என்று கண்டனர் பிரிட்டிஷ் கொடுங்கோலர்கள். அதன் விளைவாக 1799 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி பாஞ்சாலங்குறிச்சியின் மீது பிரிட்டிஷ் படைகளின் பேய் வாய்ப் பீரங்கிகள் அனல் மழை கக்கின. செந்தில் ஆண்டவா சக்கம்மா தமிழ்த் தாயே! நீயே துணை' என்று வீரவாளை உருவினான் வீரபாண்டியக் கட்டபொம்மன். அண்ணனது இடி முழக்கம் கேட்ட தம்பி ஊமைத்துரையின் சுருள்வாள் மின்னல் போல மின்னியது; சுழன்றது; பாய்ந்துவந்த பரதேசிப் படைகளின் தலைகளை இளநீர்க் காய்களைக் குலைகுலையாக வெட்டிக் குவிப்பது போலச் சீவிக் குவித்தது. ஆம், பாஞ்சாலங்குறிச்சிச் சகோதரர்களின் தலைமையில் இந்திய சுதந்தரப்போரின் முழக்கம் மீண்டும் விண்ணதிர மண்ணதிர மாற்றார் மனமதிர முழங்கியது. பாஞ்சாலங்குறிச்சிப் போர் - பாரதத்தாயின் விடுதலைக்கான போர் - நாற்பத்தொரு நாள்கள் மிகக் கடுமையாய் நடந்தது. பாஞ்சைப்பதி புனித பூமியாயிற்று. பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைச் சுற்றி ஒரே இரத்த வெள்ளம்; பிணக்காடு. முடிவில் கோட்டை பிரிட்டிஷ் படைகள் வசமாகியது. வீரபாண்டியன் தன் படைகளுடன் வெளியேறினான். சுதந்தரச் சிங்கங்கள் மலிந்த நாடு தமிழகம். அவர்கள் துணை கொண்டு மீண்டும் போரைத் தொடங்குவோம்' என்பதே அவன் திட்டம். ஆனால், சிங்கம் இருக்கும் குகையோ என்று சிந்தை தடுமாறி அவன் புகுந்த புதுக்கோட்டைச் சீமை, குள்ளநரி வாழும் கொடும்புதராய் இருந்துவிட்டது. வீரபாண்டியக் கட்டபொம்மன், துரோகி தொண்டைமானால் பிடித்துத் தரப்பட்டான் பிரிட்டிஷார் கையில் கொடுங்கோலர்கள் கையில் அகப்பட்ட சுதந்தர வீரன், அக்டோபர் மாதம், 16 ஆம் தேதி துக்குமேடை ஏறி வீரமரணம் அடைந்தான். முடிந்தது இந்திய சுதந்தரப் போரின் - தமிழக விடுதலைப் போரின் ஒரு முக்கிய கட்டம். வீரபாண்டியன் தூக்கிற்கு இரையாகி மடியக் காரணமாயிருந்த பிரிட்டிஷ் ஆதிக்கம், அவன் அருமைத் தம்பியரையும் இன்னும் பல சுதந்தர வீரர்களையும் பாளையங்கோட்டைச் சிறையில் அடைத்து வைத்திருந்தது, கட்டுண்டோம்; பொறுத்திருப்போம்; காலம்