பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த பருதுபாண்டியர் 140 வெளியேறிய ஊமைத்துரை இம்முறை தன் அண்ணனைப் போல நரி வாழும் குகைக்குள் நுழையவில்லை. சுதந்தரச் சிங்கங்கள் வாழும் சிவகங்கைச் சீமைக்குள்ளேயே நுழைந்தான். விழுப்புண் பட்டு வந்த வீரர் திலகத்தைச் சிவகங்கை மக்கள் பல்லக்குகளுடன் சென்று கொட்டு மேளத்துடன் ஆரத்தி எடுத்து அன்பு கூர்ந்து வரவேற்றார்கள் தங்கள் நாட்டு எல்லையில். என்னே அவர்களின் சுதந்தர உணர்ச்சி சுயமரியாதை உள்ளம் வீரப் பெருமகனைத் தன் மகனைப் போல அன்போடு ஆரத்தழுவி வரவேற்றுத் தன் எழில் பூத்த இல்லத்திலேயே விருந்தினனாக வைத்திருந்தாள் ஒரு தாய். அந்தத் தமிழ்த்தாய் யார் என்று நினைக்கிறீர்கள்? நம் அரும்பெறல் மாணிக்கங்களாகிய மருதுபாண்டியர்களை ஈன்ற முதுகுடிப் பிறந்த மூதின்மகளே அவள். இந்த உண்மையைப் புதுக்கோட்டை வரலாறே கூறுகிறது." மருது பாண்டியருக்கும் ஊமைத்துரைக்கும் இடையே இத்தகைய உறவு ஏற்படக் காரணம் என்ன? இவ்வினாவிற்கான விடையை அறிஞர் கால்டுவெல் தம் நூலுள் ஆராய்ந்து கூறுகிறார். பாஞ்சாலங்குறிச்சி மன்னர் தம் கோட்டை பிடிபட்டதும் ஏன் சிவகங்கைச் சீமைக்குப் பறந்து சென்றார் என்று கேட்கலாம். அவர் அவ்வாறு சென்றதன் காரணம் தம்மை அடைக்கலமாக ஏற்றுக் கொள்ளத்தக்க நாடாக அப்போது இருந்தது சிவகங்கைச் சீமை ஒன்றே. புதுக்கோட்டைத் தொண்டைமானோ, வெள்ளையர்களின் மிக நெருங்கிய நண்பனாயிருந்தான்; அத்தோடு இரண்டு ஆண்டுகட்கு முன்னேதான் வீரபாண்டியக் கட்டபொம்மனை வெள்ளையரிடம் பிடித்துக் கொடுத்தான். இராமநாதபுரம் சேதுபதியும் வெள்ளையர் பக்கமாகவே இருந்தான். வெள்ளையர் தயவு மட்டும் அவனுக்கு இல்லாதிருந்தால், எப்பொழுதோ மருது பாண்டியர் அவன் சீமையைக் கைப்பற்றியிருப்பர். மேலும், அவனுக்குத் தன் உறவினர்களுக்குள்ளேயே மைலப்பன் என்ற ஒரு பகைவன் இருந்தான். வெள்ளையருடைய படை வலியும் கண்காணிப்புந்தான் அவன் சூழ்ச்சிகளை அடக்கி வைத்திருந்தன. மற்றும் இராமநாதபுரம் நெடுங்காலமாகவே வெள்ளையரால் நியமிக்கப்பட்ட தென் பகுதிக் கலெக்டருக்கு தலைமை அலுவலகமாய் இருந்தது. கர்நாடகம் முழுவதும் வெள்ளையர் ஆக்கிரமிப்புக்கு இரையாகிய பின்னும், இராமநாதபுரம் கலெக்டர் லூவிங்டனுடைய அதிகாரத்திற்கே அடங்கி இருந்தது. அதன் நிருவாகம் முழுவதையும் லூவிங்டனின் தலைமைச் சிப்பந்தி ஒருவனே கவனித்து வந்தான். இக்காரணங்களால் இராமநாதபுரத்தில் கட்டபொம்மனும் அவன் தோழர்களும் அடைக்கலம் புகுவது என்பது ஒரு நாளும் இயலாத காரியம். ஆனால், அதே நேரத்தில் எந்த மருதுபாண்டியர் துண்டுதலின்மேல் அவர்கள் புரட்சி விளைத்தார்களோ, அவர்கள் சீமையிலேயே அடைக்கலம் புகுவது இயற்கை. நமக்குக் கிடைக்கக் கூடிய