பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153 பேராசிரியர் ந.சஞ்சீவி எப்படியோதப்பிப் பிழைத்து வெள்ளைப்பட்டாளம் சிறு வயலுக்கு ஒடோடி வந்து நின்ற பின்பே மூச்சுவிட்டது. அன்றைய போரில் பலியான வெள்ளை வீரர் பலர். அன்று மாலைதான் முதன் முதலாகச் சிவகங்கைச் சீமைக்கும் பரதேசிகள் தயவால் அரசனான உடையத் தேவன் தன் அண்ணனோடும் கிழட்டுப் பார்ப்பனன் ஒருவனோடும் வந்தான்; அக்கினியூவைக் கண்டு "சலாம் போட்டுவிட்டுத் தன் கூடாரத்திற்குத் திரும்பினான். திருடன் ராஜவிழி விழிப்பது போல விழித்துக் கொண்டிருந்த அந்தக் கோழையின் அடிமைப் புத்தி ஆங்கிலத் தளபதிகட்கு அளவிலா ஆனந்தம் அளித்தது. ஆகஸ்டு மாதம் 30 ஆம் தேதிதான் வெள்ளைப் படை ஒரு முக்கியமான முடிவுக்குவந்தது. அம்முடிவு வேறொன்றும் அன்று ஒரு மாதமாகப் படாத பாடு பட்டுச் செய்த முயற்சியெல்லாம் பாழ். எனவே, காட்டு வழியாகக் காளையார் கோவிலை அடையவைத்த ஆசைக்கு நெருப்பு வைக்க வேண்டுவதுதான் என்ற முடிவு எழுந்தது. வெள்ளை வீரர்கள், இஃது அவமானந்தான் என்றாலும், உயிர் தப்பினால் போதும்! என்று இம்முடிவை மனமார வரவேற்றார்கள். இவ்வாறு வெள்ளைப்படை விலவிலத்துப் போனதற்குக் காரணங்கள் பல. அவற்றைக் கர்னல் வெல்ஷ் தன் நாட்குறிப்பில் மிகச் சுவையாக வருணித்துள்ளான்.” வெள்ளைப்பட்டாளத்தின் பாசறை பல்வகை நோய்களுக்கு இருப்பிடம் ஆயிற்று. மணிக்கு மணி மருதிருவர் படை தாக்கப்பட்டது. எனினும், வெள்ளைப்படையை விடுதலை வீரர்கள் வளைத்து வாட்டாத நாளில்லை; நேரமில்லை. ஒரு சிறு கடிதத்தைக் கூடக் காளையார் கோவில் காட்டுக்குள்ளிருந்து வெள்ளையர்களால் வெளியே அனுப்ப முடியவில்லை. ஆகஸ்டு மாதம் 31 ஆம் தேதி காளையார் கோவில் காட்டை அழிக்கும் வேலை வெள்ளையர்களால் அறவே கைவிடப்பட்டது. அன்று மட்டும் நான்கு வெள்ளையர் மருதிருவர் படையால் கொல்லப்பட்டனர். செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி முப்பத்திரண்டு நாள்கள் வெள்ளைப்பட்டாளத்தார்கள் இரவு பகலாய்ச் செய்த வேலைகள் இட்ட பாதைகள் - கட்டிய கட்டடங்கள் அனைத்தும் அவர்களாலேயே தீ வைக்கப்பட்டு அழிந்து நாசமாக்கப்பட்டன; ஆம், அழக்கொண்ட வெல்லாம் அழப்போயின. இவ்வாறு வெள்ளைத் தளபதிகள் அவமானத்தால் உடல் சிறுத்துப் போகும்படி முடிந்த காளையார் கோவிற்காட்டைச் சிதைக்கும் போராட்டம் பற்றி நாம் தெள்ளத் தெளிவாக அறிந்து கொள்ளப் பெரிதும் பயன்படுவன கர்னல் வெல்ஷின் நாட்குறிப்புகளே ஆகும். எனினும், சென்னை இராணுவத்தின் வரலாற்றை மிக விரிவாக எழுதியுள்ள அறிஞர் வில்லன் தம் நூலுள் இப்போர்க்காலம் பற்றித்தரும் சில குறிப்புகள் சுவை மிக்கவை.