பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155 பேராசிரியர், ந.சஞ்சீவி நாலு கோட்டை என்ற புகழ் வாய்ந்த நகரம் இருந்தது. சிவகங்கைக்கு மன்னராய் வருவோர் அவ்வூரின் தலைமக்கள் அனுமதி பெற்றே முடிசூட்டிக் கொள்ள வேண்டும் என்ற கண்டிப்பான வழக்கம் அந்நாளில் இருந்தது. வெள்ளையர் தயவால் சிவகங்கைக்கு மன்னராக முடி சூட்டிக் கொள்ள இருந்த உடையத் தேவர் அந்த ஊர் மக்களின் காணிக்கையையும் ஆதரவையும் எப்படியோ பெற்றிருந்தார். சோழபுரத்துக் கோயிலைப் பாதுகாக்கும் பொருட்டுக் காப்டன் ஸ்மித்துத் தலைமையில் ஒரு படை நிறுத்தப்பட்டிருந்தது. செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதி இரண்டு மைல் தூரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மருதுவின் படை இருந்த துப்பு வெள்ளையர்க்குக் கிடைத்தது. உடனே மேஜர் ஷெப்பர்டு தலைமையில் ஒரு படை புறப்பட்டுச் சென்றது. அது மருதுவின் படையோடு கடும்போர் புரிந்து அந்தக் கிராமத்திலிருந்த ஏராளமான உணவுப் பொருள்களையும் கொள்ளை அடித்து வந்த்து. செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி மேஜர் கிரகாம் புண்பட்டும் நோயுற்றும் நலிந்திருந்த பல அதிகாரிகளுடன் மதுரைக்குக் கிளம்பிச் சென்றான். மருதிருவர் படையால் ஆகஸ்டு மாதம் 6 ஆம் தேதி நையப் புடைக்கப்பட்ட கிரகாம் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமலே 辽》阿Gös一莉邸。 செப்டம்பர் பன்னிரண்டாம் தேதி நல்லோர் வருந்த வேண்டியநாள். ஆனால், அன்றுதான் சோழபுரத்தில் கொட்டு முழக்கு ஏராளமாய் இருந்தது. கொம்புகள் முழங்கின. வேத பாராயணங்கள் நடந்தன; பொம்மை ராஜா உடையத் தேவருக்கும் முடிசூட்டு விழா நடந்தது. இந்தப் பொம்மை அரசரைப் பற்றி வெல்ஷ் தன் நூலில் நகைச்சுவை ததும்ப வரைந்துள்ளான். பொம்மை ராஜா உடையத் தேவர் செப்டம்பர் பன்னிரண்டாம் தேதி அதிகாலையிலேயே பறவைகள் விழிக்கு முன்பே - எழுந்து விட்டார். கானமயிலாடக் கண்டிருந்த வான்க்ோழி போலத் தம்மைச் சிங்காரித்துக் கொண்டார். வெள்ளையர் இராணுவம் தம் உடலையும் உயிரையும் பாதுகாக்கும் பொருட்டுக் கூடவே வரச் சோழபுரக் கோவிலுக்கு ஊர்வலமாய்ச் சென்றார். நடுப்பகல் வரை சடங்குகள் நடந்தன. மாலை கர்னல் அக்கினியூவும் கர்னல் இன்ஸும் தலை நிமிர்ந்து தனி ஊர்வலமாய்ப் புறப்பட்டுச் சோழவரக் கோவிலுக்குச் சென்றனர். அங்கே ஆலயத்திற்கு முன் அமைக்கப்பட்ட பந்தலில் அனைவரும் அமர்ந்தனர். பரதேசி அக்கினியூ பொம்மை ராஜா உடையத் தேவருக்கு அரச ஆடை அளித்தான், அதே நேரத்தில் அவர் தமையனாருக்கு ஒரு சாதாரண உடையைத் தந்தான். வெள்ளையன் கொடுத்த ஆடைகளை உடுத்துக் கொண்டு சற்றும் சுயமரியாதையின்றி வெளியே வந்தார் உடையத் தேவர். பந்தலில் பட்டுக்