பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157 பேராசிரியர் ந.சஞ்சீவி வைக்கப்பட்டனர். மலேயாப் படைத் தளபதியான பீட்லீயும். லெப்டினன்டுகள் பிளிச்சரும், விகோவும் நோய் நீங்கிப் போருக்குச் சித்தமானார்கள். மலேயாப் படைத்தளபதி ஒருவன் அன்றைய தினத்தில் வயிற்றுப் போக்கால் காலமானான். செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி லெப்டினன்ட் பெப்பர் தலைமையில் சென்ற ஒரு படை டிராட்டர் என்பவனோடு சேர்ந்து கொண்டு இரவோடு இரவாய்க் கீழவிளவு என்று கிராமத்தைத் தாக்கியது. அதே இரவில் சேம்பர் என்ற தளபதியின் தலைமையில் சென்ற படை பக்கத்தில் உள்ள இன்னொரு கிராமத்தைத் தாக்கியது. இத்தாக்குதல்களால் வெள்ளைப்படைக்குப் பெரிய இலாபம் ஒன்றும் கிட்டவில்லை. செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி வெள்ளைப் பட்டாளம் பிரான் மலையைத் தாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு புறப்பட்டது. பகலெல்லாம் காட்டு வழிகளைக் கடந்து சென்று அப்பட்டாளம் மேலுளில் முகாம் இட்டது. நன்றாக மழை பெய்திருந்தமையால் வெள்ளைப் பட்டாளம் இச்சந்தர்ப்பத்தில் சேற்றிலும் சகதியிலும் சிக்கி அடைந்த அவதி கொஞ்சநஞ்சம் அன்று. இந்த நிலையில் இருள் சூழ்ந்ததும் பறங்கிப்படை தான் செல்ல வேண்டிய பாதையினின்றும் எப்படியோ தவறிவிட்டது. ஒரு சிறு திடலில் பட்டாளம் முழுவதும் உறங்கிவிட்டு அதிகாலையிலே எழுந்து மீண்டும் சேற்றிலும் சகதியிலும் இறங்கித் துப்பாக்கிகளை இழுத்துக் கொண்டும் சுமந்து கொண்டும் சென்ற வெள்ளைப்படை, உரைக்க ஒண்ணாத் துன்பம் உற்றது. கடைசியாக ஆங்கிலப்படை சிங்கப் பிடாரியை அடைந்தது. அங்கிருந்து நான்குமைல் துரந்தான் பிரான்மலை உள்ள இடம். பிரான் மலைக்கோட்டையைப் பிடிக்க எட்டயபுரக் கூலிப்படைகளோடு வெள்ளைப் படையில் ஒரு பகுதியும் ஏவப்பட்டது. ஆனால், மருது பாண்டியர் மலை மேல் இருந்து அளித்த வரவேற்பைக் கண்டு அஞ்சிய புதுக்கோட்டைக் கூலிப்படைகள் முன்னேற அஞ்சின." கோழைகளின் நடுக்கத்தை அறிந்ததும் விடுதலை வீரர்கள் பேரூக்கம் கொண்டு மழையெனக் குண்டுகளைப் பொழிந்தார்கள். ஆனால், வெள்ளைப் படைகளின் பீரங்கித் தாக்குதலால் பிரான் மலை இறுதியாகப் பிடிபட்டது. கர்னல் அக்கினியூ தலைமையில் வெள்ளைப் பட்டாளம் மலைமேல் ஏறிக் கோட்டைக்குள் நுழைந்தது. அங்கே அது கண்ட காட்சி பெருவியப்பை அளித்தது. துரத்திலிருந்து பார்த்தால் ஒருசிறு சத்திரம் போலத் தெரிந்த அக்கோட்டைஇவ்வளவு பலம் பொருந்தியதாகவும் பெரியதாகவும் இருக்கும் என்று பறங்கிப் பட்டாளம் கனவிலும் கருதவில்லை. பிரான் மலையைப் பிடித்த வெள்ளைப்பட்டாளம் செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி ஒக்கூருக்குத் திரும்பியது.