பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 158 செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி எட்டயபுரச் சிப்பாய்களோடு குதிரைப்படையும் காலாட்படையும் மீண்டும் பிரான் மலைக்கு அனுப்பப்பட்டன. நத்தத்திலிருந்து காப்டன் காட்பிரை ஏராளமான உணவுப் பொருள்களை எடுத்து வருவதற்குத் துணை புரிவதே அப்படை சென்றதன் நோக்கம். செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி காளையார் கோவிலை வேறு வேறான மூன்று வழிகளில் தாக்கித் தகர்ப்பது என்றும் திட்டமிடப்பட்டது. அதே தினத்தில் கர்னல் ஸ்பிரே இரவோடு இரவாய் ஒக்கூரிலிருந்து சிறுவயல் சென்று அங்கிருந்து முன்பு பறங்கிப்படைகளால் அமைக்கப்பட்ட காட்டுப்பாதை வழியாகப் போய்க் காளையார் கோவிலைத் தாக்கும்படி கட்டளை இடப்பட்டது. அப்படையில் ஆயிரவருக்கு மேற்பட்ட படைவீரர் இருந்தனர். சிறு வயலிலிருந்து காளையார் கோவிலுக்குப் போக முன்னர் வெள்ளையர் அமைத்த பாதையின் முடிவிலிருந்து காளையார் கோவிலுக்குப் போக ஒரு இரகசிய வழி இருந்தது. சுதந்தர வீரர்கட்கு மட்டுமே தெரிந்திருந்த அப்பாதையை மகம்மது கலீல் என்ற பாவி வெள்ளையர்க்குக் காட்டிக் கொடுத்தான். அவன் சொல்லிக் கொடுத்த உளவைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டது ஏகாதிபத்தியக் கும்பல். நாட்டைக் காட்டிக் கொடுத்த துரோகிக்குப் பரிசும் தந்தது பரங்கியர் கூட்டம்.” கர்னல் ஸ்பிரே இவ்வாறு அந்தத் துரோகி காட்டிய வழியே செல்ல மறுநாள் அக்டோபர் மாதம் முதல் தேதி காலை கர்னல் அக்கினியூ புறப்பட்டுக் காளையார் கோவிலுக்கு முத்துர் வழியாகச் செல்லும் நேர்ப்பாதை வாயிலாக விரைந்தான். கர்னல் இன்ஸ் என்பவன்தாளான் குடி கீரனூர் வழியாகச் சோழபுரத்திலிருந்து காளையார் கோவிலைச் சாடினான். இப்படி எதிர்பாராத வகையில் மூன்று வழியாகவும் தங்கள் அருமைத் திருநகரம் தாக்கப்பட்டது அறிந்து திடுக்குற்றனர் மருது பாண்டியரும் அவர் படை வீரர்களும். எனினும், சுதந்தர வீரர்கள் ஆங்காங்கே பாய்ந்து வரும் பறங்கிப் படைகளை எதிர்த்துக் கடும்போர் புரிந்தார்கள். கர்னல் இன்ஸ் படையை எதிர்த்து அவர்கள் நடத்திய ஆவேசம் மிக்க போரில் மட்டும் விடுதலை வீரர்களுள் நூறு பேர் பலியாயினர். கடைசியாகக் காளையார் கோவிலும்" அதன் பலம் பொருந்திய கோட்டையும் விழுந்தன. 1801 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் முதல் தேதி காலை எட்டு மணிக்கெல்லாம் கடும்போரின் முடிவில் துரோகி ஒருவன் கூறிய உளவைப் பயன்படுத்திக் கொண்டு காலன் போலக் கடுகி வந்த கர்னல் ஸ்பிரே காளையார் கோவிலைக் கைப்பற்றிவிட்டான். அங்கே அவனும் ஆங்கிலப் படை வீரர்களும் தங்கள் நெஞ்சைப் பிளக்கத் தயாராக வைக்கப்பட்டிருந்த இருபத்தொரு துப்பாக்கிகளையும், ஏராளமான