பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

159 பேராசிரியர் ந.சஞ்சீவி தளவாடங்களையும், கணக்கற்ற சாமான்களையும், கடிகாரம் முதலியவற்றையுமே கண்டார்கள். விடுதலை வீரர்கள் ஆத்திரத்தோடும் ஆண்மையோடும் போரிட்டும் பயனேற்படாமல் போயிற்று. ஆம். துரோகம் வென்றது; ஏகாதிபத்தியம் வென்றது. காளையார் கோவில் வெள்ளைப் பறங்கியர் கையில் சிக்கியது. கணக்கற்ற விடுதலை வீரர்கள் குடும்பம் குடும்பமாக வீடு வாயிலை, மனைவி மக்களை எல்லாம் மறந்து, நீர்க் குமிழியினை ஒத்த உயிரை நல்ல கொள்கைக்கு ஈவதே அமிழ்தினும் இனிய தமிழ்ப் பண்பு' எனக் கருதிப் போர்க் களம் புகுந்து சுதந்தர தேவியின் உள்ளம் குளிர மருது பாண்டியர் வளர்த்த ஒரு பெருவிடுதலை வேள்வித் தீயில் தங்கள் இன்னுயிராகிய நெய்யை வார்த்து 'நெஞ்சுமலி உவகை கொண்ட வீர வரலாறும் ஒருவாறு முடிந்தது."