பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163 பேராசிரியர் ந.சஞ்சீவி உத்தரவிட்டது. இது தொண்டைமான் எண்ணி இன்புறக் கூடிய நிகழ்ச்சி என்று கிளைவ் புகழ்ந்துரைத்தார். "சிவகங்கையில் நடந்த சுதந்தரப்போர் ஒருவாறு முடிவுற்றதும் தொண்டைமானின் படைகள் அவன் நாட்டிற்கே திருப்பி அனுப்பப்பட்டன. அப்பொழுது 1801 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், முதல் தேதி கவர்னர் கிளைவ் தொண்டைமானுக்கு ஒரு பாராட்டுக் கடிதம் வரைந்தார். அக்கடிதத்தில் அவன் படைவலியாலும் அவ்வப்போது அவன் கூறிவந்த உளவுகளாலும் கம்பெனி அரசாங்கம் புரட்சி வீரர்களை அடக்குவதில் வெற்றி கண்டுவிட்டது என்றும், அது குறித்துத் தாம் அடையும் மகிழ்ச்சிக்கு ஓர் அளவில்லை என்றும், வெள்ளை அரசாங்கத்திற்கும் தொண்டைமானுக்கும் இடையே இருக்கும் நட்பு மேலும் மேலும் வளர்ந்துவர ஆண்டவன் அருள் புரிய வேண்டுமென்றும் அக்கடிதத்தில் கிளைவ் பிரபு திருவுள்ளம் கனிந்து தீட்டியிருந்தார்." இவ்வாறு வெளி நாட்டானாகிய தொண்டைமானின் சதி ஒரு புறமும் உள் நாட்டானாகிய உடையத்தேவனின் சதி ஒரு புறமும் சேர்ந்து மருது பாண்டியர்க்குப் பெருங்கேடு சூழ்ந்தன. புதுக்கோட்டையான் படை வலி கொண்டு செய்த சதியும் நடை பெறாமல் மட்டும் இருந்திருந்தால், கர்னல் அக்கினியூ மட்டுமின்றி, அவன் பாட்டனே வந்திருந்தாலும், காளையார் கோவிலைக் கைப்பற்றுவது அவ்வளவு எளிதில் நடந்திருக்கக்கூடிய செயல் அன்று. ஆயினும், அந்தோ துணிச்சல் பிறந்த இடத்தில் துரோகமும் கூடப் பிறந்து விட்டதே ஆண்மை வாழ்ந்த இடத்தில் அடிமைப்புத்தியும் வளரத் தொடங்கிவிட்டதே 1801 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் முதல் தேதி காளையார் கோவில் பிடிபட்ட பின் வெள்ளைப் படைகள் அடைந்த இறுமாப்பிற்கு ஒரு வரம்பில்லை. நாற்றிசைகளிலும் வேட்டை நாய்களைப் போன்ற கூலிப் படைகளை ஏவிவிட்டு, மருது பாண்டியரைப் பிடித்துவரக் கட்டளையிட்டான் கர்னல் அக்கினியூ கோட்டை பிடிபட்டது; கொத்தளம் பிடிபட்டது; ஆனால், நாட்டின் தலைவர்கள் இன்னும் பிடிபடவில்லையே! என்று எண்ணி ஆத்திரமுற்று நமட்டைக் கடித்துக் கொண்டான் நாடோடிகளின் தலைவன் 'மருது பாண்டியர்களின் தலைகளைக் கொண்டு வாருங்கள். மலை மலையாகப் பொன் கொடுப்பேன்! என்று சிப்பாய்களிடம் கர்ஜித்தான். காசாசை கொண்ட கயவர்கள், கருணை வள்ளல்களான மருதுபாண்டியர்களை-தியாகமே வடிவெடுத்த தேசபத்தர்களைப் பிடித்துவர எம தூதர்கள் போலக் கிளம்பினார்கள். அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி, எவனோ ஒரு பாவி செய்தி ஒன்று கொண்டு வந்தான். அது வாயிலாகக் காளையார் கோவிலை அடுத்த மங்கலத்தில் மருதுபாண்டியர் தங்கியிருக்கின்றனர் என்பதை அறிந்தது ஆங்கிலப் படை அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி பொழுது புலர்ந்ததும்