பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 164 புழுதி எழுப்பிப் புறப்பட்டது மேஜர் ஷெப்பர்டின் தலைமையில் வெள்ளைப்படை விடியற்காலத்தில் புறப்பட்ட அப்படை காலை இரண்டு மணிக்குள் மங்கலம் போய்ச் சேர்ந்தது. ஊரை அடைந்ததும் தேசீய வீரர்களைத் தேடத் தொடங்கியது. ஆனால், மருது பாண்டியரின் முடிவு நெருங்கிவிட்டது என்று எண்ணிய அவ்வூரினர் கோழைகளாய் வந்து கும்பினியான் காலில் சரண் புகுந்தனர். காசாசை கொண்டு அக்கிராமத்தின் தலைவர்கள் காடுகளைக் குறைந்த விலைக்குக் குத்தகை கேட்பதில் போட்டியிட்டார்கள். அவர்கள் வாயிலாகத் துப்பு விசாரித்தார்கள் ஏகாதிபத்திய வெறியர்கள். மங்கலம் கிராமத் தலைவர்கள், இந்த இடத்தில் சிறிது நேரத்திற்கு முன்பு இரண்டாயிரம் வீரர்களுடன் வந்து இருந்த மருதுபாண்டியர்கள் இப்போது காடுகளுள் புகுந்துவிட்டார்கள்,' என்று உளவு கூறினார்கள். அக்கோழைகளின் துணை கொண்டும் கூலிப் படைகளின் உதவி கொண்டும் இரண்டே மணி நேரத்தில் மங்கலத்தைச் சுற்றியிருந்த காடுகளைக் கைக்கு வந்த வகையெல்லாம் வெறி கொண்டு வெட்டித் தள்ளின. பரதேசிப் படைகள். அக்டோபர் மாதம் நான்காம் தேதி குறைந்த தொகைக்குக் காடுகள் குத்தகைக்கு விடப்படுவது அறிந்து கவுல்' கேட்க ஐம்பதுக்கு மேற்பட்ட கிராமங்களின் தலைவர்கள் கும்பினியான் இருக்கும் முகாம் நோக்கி விரைந்து வந்தார்கள். அந்தப் பேடிகள், தங்கள் உயிருக்குயிரான இருநூறே வீரர்களோடு மருது சகோதரர்கள் சங்கரப்பதிக் காட்டிலே சரண் புகுந்து விட்டார்கள்,' என்ற செய்தியைச் சொன்னார்கள். பாவிகள் கொடுத்த துப்பைப் பயன்படுத்திக் கொண்டு பாய்ந்தது பறங்கிப்படை மருது பாண்டியரின் தலையைக் கொண்டு வருபவருக்குத் தக்க விலை கொடுக்கப்படும், என்று தண்டோரா முழங்கியது. நாடாண்ட மன்னர்களின் தலையைக் கொய்து கொண்டு வரும் துரோகிகளுக்கு நாடோடிகள் பரிசு கொடுக்கும் காலம் ஆரம்பமாகிவிட்டது! கண்ணுக்கெட்டிய துரமெல்லாம் காசாசை கொண்ட கூலிப்படைகள், கையில் கொலை வாளும் துப்பாக்கியும் ஏந்தி மருதுபாண்டியரைத் தேடித் திரிந்தன. வாழ்ந்த காலத்தில் மருது பாண்டியரின் பால் எவ்வளவோ உபசரிப்புகளைப் பெற்ற கர்னல் வெல்ஷ் என்பவன், கல் நெஞ்சத்தோடு தன் நூலின் இறுதியில் எழுதியுள்ள வாசகத்தைப் படிக்கும் போது கண்ணீர் மல்காத தமிழன் இருக்க இயலாது. துரோகிகள் நம் நாட்டிலேயே மலிந்து விட்ட காலத்தில் வெள்ளைத் தளபதி ஒருவன் அவ்வளவு கல் நெஞ்சோடு வாழ்ந்ததில் வியப்பொன்றும் இல்லை அல்லவா? கர்னல் வெல்ஷ் எழுதுகின்றான்: 'மருது சகோதரர்களுள் ஒருவரது தலையைக் கொய்து கொண்டு வருபவர்களுக்கு ஏராளமான பரிசுத் தொகை வழங்கப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. அந்த மனிதனது தலையைப் பறித்து