பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

165 பேராசிரியர் ந.சஞ்சீவி வருவதற்காக நான் அரும்பாடு பட்டுக் கொண்டிருந்த போது எங்கள் வெள்ளைப் படையைச்சார்ந்த கூலிச் சேவகர்கள் கூட்டம் அவனைக் கண்டு பிடித்துத் துப்பாக்கியால் சுட்டது; புண்ணாகிப் புழுதியில் வீழ்ந்த அவனை எங்கள் முகாமுக்குக் கொண்டு வந்தும் சேர்த்தது. அதனால், எங்களுக்குக் கிடைக்க வேண்டிய பத்தாயிரம் பகோடாக்கள் அல்லது நாலாயிரம் பவுன்கள் கிடையாமற்போயின. கொலையுள்ளம் கொண்ட வெள்ளைத் தளபதி சித்திரிக்கும் இந்நிகழ்ச்சி நடந்த சின்னாள்களில் மருது சகோதரர்களுள் மற்றவரும் பிடிபட்டார். இரு சகோதரர்களையும் பிடித்த ஏகாதிபத்தியக் கும்பல் ஊமைத்துரையையும் கைது செய்தது. பறங்கியரிடம் சிக்கிய சுதந்தர வீரர் அனைவரும் கொலைத் தண்டனைக்கு இரையாயினர். திருப்பத்துர்க் கோட்டையில் மருது சகோதரர்களையும் பாஞ்சாலங்குறிச்சியில் ஊமைத்துரையையும் தூக்கிலிட்டுக் கொன்றது பேயுள்ளம் படைத்த கம்பெனி வர்க்கம். மாவீரர்களைத் தூக்கிலிட்டுக் கொன்றதும் தமிழகத்தில் தலை நிமிரலாயிற்று ஆங்கில ஏகாதிபத்தியம்.” மருது பாண்டியரைச் சேர்ந்த வீரர்களும் உறவினர்களும் வேட்டையாடப்பட்டார்கள். தென்னாட்டில் ஓங்கி உயர்ந்து நின்ற கோட்டைகளெல்லாம் தரைமட்டமாக்கப்பட்டன. தொன்றுதொட்டு வாளும் வேலும் ஏந்தி வீர வாழ்வு வாழ்ந்த மறவர்களிடமிருந்து பல ஆயிரக்கணக்கான போர்க்கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டன". வீர சகோதரர்களின் குடும்பத்தைச் சேர்ந்த எழுபது பேர் கண்காணாத பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவிற்கு நாடு கடத்தப்பட்டனர். அவர்களுள் ஒருவரே சின்ன மருதுவின் இளைய மைந்தரான துரைசாமி என்பவர். பதினைந்தே வயதினரான அவ்விளைஞரைக் கப்பலேற்றி அனுப்பும் போதும் பதினெட்டாண்டுகள் கழித்து அவரைக்கண்ணற்றதொரு தீவினிலே தளர்ந்து போன நிலையில் கண்டபோதும் தன் உள்ளத்தில் குமுறி எழுந்த எண்ணங்களை எல்லாம் கல் நெஞ்சம் படைத்த கர்னல் வெல்ஷே தன்நூலில் கரைந்துருகி எழுதியுள்ளான். கோரமான சாவிலே வீர வாழ்வைக் கண்டனர் மருது பாண்டியர்கள். ஆனால், அவர்கள் குலத்துக்கொரு மைந்தராய் வாழ்ந்த துரை சாமிக்கோ, வாழ்வே சாவாய் முடிந்தது. கடிதத்தாலாவது கன்னித் தமிழ் நாட்டோடு உறவு கொள்ளத் துடியாய்த் துடித்த அவ்வுத்தமர் சாகாமல் செத்த வரலாற்றைக் கர்னல் வெல்ஷின் நூலால் அறியும் போது நம் அங்கமெல்லாம் வாயாகி அழும்' வெள்ளைத் தளபதிகள் விட்டுச் சென்ற குறிப்புகளால் மருதுபாண்டியரின் முடிவைப் பற்றி நாம் அறியக் கூடிய செய்திகள் இவ்வளவே. ஆனால், சிவகங்கைச் சரித்திரக் கும்மியும் அம்மானையும் போன்ற நூல்களாலும், தமிழ் நாட்டு வரலாற்று ஆசிரியர்கள் நூல்களாலும்