பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 166 மருது பாண்டியர்கள் முடிவைப் பற்றி வேறு சில செய்திகளும் நமக்குத் தெரிகின்றன." "ஆங்கிலப் படைகளும் மருதிருவர் படைகளும் மிக்க உக்கிரத்துடன் போர் புரிந்தன. பெரிய மருது பாண்டியர்காட்டுக்குள் ஒடிவிட்டார். இளைய மருதுவைக் கறுத்தான்' என்ற அவர்கள் அந்தரங்கக் காவலனே பிடித்துக் கொடுத்துவிட்டான். சின்ன மருதுவைக் காவலில் வைத்தனர். அவர் உணவின்றி இருந்தார். பெரிய மருது காட்டில் பல இடங்களில் அலைந்து திரிந்தார். பசி, இளைப்பு முதலியவற்றால் வருந்தினார். முடிவில் மேஜர் அக்கினீஸ் என்பவர் படையோடு வந்து அவரைக் கைது செய்து அழைத்துப் போனார். இளைய மருதுவைக் கண்ட மூத்த மருதேந்திரர் கதறி அழுதார். 'அக்கினிஸ் துரையால் நம்மிருவருக்கும் தபசு செய்யும் பாக்கியம் கிடைத்தது, என்று கூறினார். அவர்கள் படும் துன்பத்தைக் கண்டு கெளரிவல்லபராசன் தூதுவன் ஒருவனை அனுப்பி மருது சகோதரர்களிடம் சமாதானம் பேசினான். மூத்த மருது இணங்கவில்லை. கெளரி வல்லபனும் தான் மருது சகோதரர்களுக்கு இழைத்த தீங்கை நினைத்து வருந்தினான். பின்பு அக்கினீஸ் துரை திருப்பத்துர்க் கோட்டைத் தென் மூலைக் கொத்தளத்தில் தென்னை மரங்கள் போட்டு ஊஞ்சல் போலக் கயிறு பூட்டினான்; பின்பு மூத்த மருதேந்திரரை அழைத்துத் தூக்கில் மாட்டினான். அவரும் பாஞ்சாலங்குறிச்சி ஊமைத்துரையால் இந்தத் தவம் செய்யும் பாக்கியம் கிடைத்தது என்ற மன மகிழ்ச்சியுடன் காளையார் கோவில் ஈசன் திருவடிகளை மனத்தில் தியானித்துத்துக்கில் தொங்கினார். மற்ற அரசர்கள் பூமாரி பொழிந்தார்கள். இரும்பினால் கிளிக் கூடு போலச் செய்து, அதனுள் இளைய மருதுவை அடைத்துத் தூக்கினர். அவரும் இறைவனைத் தியானித்துக் கொண்டே உயிர் நீத்தார். பின்பு மருது சகோதரர்களிடம் பழகி அவர்களுக்கே துரோகம் செய்த கறுத்தான் என்பவனையும் துக்கிலிட்டனர்; பின்னர் மருதேந்திரர் உறவினர்கள் முதலானோரையும் கொல்வித்தனர்.” இதுவே சிவகங்கைச் சரித்திரக் கும்மி தெரிவிக்கும் செய்தியாகும். மருது பாண்டியரின் முடிவைப் பற்றிய விளக்கங்கள் எவ்வாறாயினும், அவர்கள் கம்பெனியார் விளைத்த கொடுமையால் துக்கிலே மாண்டார்கள் என்பதும், அவ்வாறு துக்குமரமேறி உயிர்துறக்கும் போது தெய்வ பத்தி நிறைந்த அத்தேசபத்தர்கள் காளையார் கோவிலில் குடிகொண்ட கண்ணுதற் பெருங்கடவுளின் திருப்பெயரை முழங்கியவாறே கண் மூடினார்கள் என்பதும் மட்டும் உறுதி."தாங்கள் அழியினும் தங்களால் விடப்பட்ட அறங்களுள் எதுவும் சிதையக் கூடாது என்பதே அவர்கள் கடைசியாகத் தெரிவித்த விருப்பம் என்பது விளங்குகிறது. தாங்கள் மாண்டதும் தங்கள் உடலைத் திருப்பத்தூரிலும் தலைகளைக் காளையார் கோவில் சந்நிதிக்கு எதிரிலும் சமாதி வைக்க வேண்டும் என்பதே அவர்களது