பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 170 கொந்தகை என்னுமொரு திருநகரில் கணக்கராய் முத்தழகுப் பிள்ளை என்ற ஒருவர் இருந்தார். காராள வகுப்பினர் அவர். ஆண்டிலே இளைஞராகிய அவர் மீது பொறாமை கொண்ட சிலர் அவர்க்குக் கேடு சூழத் திட்டமிட்டனர். இதை அறிந்த முத்தழகுப் பிள்ளை. தீயோர் சிலர் வாழும் இவ்வூரைவிட்டே போய்விட வேண்டும், என்று கருதினார். அவ்வாறே இன்று பார்த்திபனூர் என்று குறிக்கப்படும் பார்த்திப குலசேகரபுரத்தை அடுத்து உள்ள தடுத்துப் புனைங்கனூர் போய்ச் சேர்ந்தார். அங்கு உள்ள தீர்த்தக் குளக்கரையில் படுத்துக் களைப்புத் தீரக் கண்ணயர்ந்தார். அவ்வமயம் அங்கு வந்த கவிராயர் ஒருவரின் நட்பு அவருக்குக் கிடைத்தது. 'முத்தழகுப் பிள்ளை என்ற பெயருக்கு ஏற்ற முகப் பொலிவும், கணக்கர் என்ற தொழிலுக்கு ஏற்ற கூரிய அறிவும் அவருக்கு இருப்பதை அறிந்த கவிராயர், திருச்சியை அடுத்த துவரங்குறிச்சி என்னும் ஊரில் தமக்கு வேண்டிய குடும்பம் ஒன்றில் அவருக்குத் திருமணம் முடித்து வைத்தார். திருமணம் ஆனபின் முத்தழகுப் பிள்ளை தடுத்துப் புனைங்கனூர்க்கே வந்து கணக்கப் பிள்ளையாய் அமர்ந்தார். அவ்வூர்த் தீர்த்தக்கரையில் பூரீராமநல்லூர் செல்வ விநாயகர் கோவில் என்ற பெயர் உடைய கோவில் ஒன்றையும் தமது முயற்சியால் கட்டுவித்து வழிபாடுகள் செய்து வந்தார். இப்படி இருக்கும் காலத்திலேதான் வெள்ளைக் கம்பெனிக்கும் வீரமருது சகோதரர்கட்கும் இடையே போர் மூண்டது. சிவகங்கைச் சீமைக்குள் கால் வைத்த கம்பெனிப் படையின் தலையை நொறுக்கிப் புறமுதுகு காட்டும்படி செய்தார்கள் மருது சகோதரர்கள். கம்பெனிப் படை இராமநாதபுரத்திற்கு ஒட்டம் எடுத்தது. ஒடும் கம்பெனிப் படையைத் திரும்பி வாராதபடி துரத்தி அடித்துவிட்டு அவர்கள் பார்த்திபனூருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் தடுத்துப்புனைங்கனூர்க் கணக்கப்பிள்ளையைச்சந்திக்க நேர்ந்தது. சின்ன மருது கணக்கரைப் பார்த்து, என்னையா, எங்கே மூன்று வருஷக் கணக்கு? என்றார். இதோ என்று பிள்ளையார் கோவிலுக்கு உள்ளே சென்ற கணக்கர் ஒரு கட்டு ஒலைச்சுவடியைக் கொண்டு வந்து சின்ன மருதுவிடம் கொடுத்தாராம். அவ்வளவும் வெள்ளோலையாய் இருப்பதை அறிந்த சின்ன மருது, 'கணக்கரே, என்ன சேதி?' என்று கேட்டாராம். உடனே கணக்கர் மூன்று வருடக் கணக்குகளையும் மனப்பாடமாக ஒப்பித்து, வசூல் செய்த பணத்தையும் சின்ன மருதுவிடம் பயபத்தியுடன் தந்து, எல்லாம் இங்கு எழுந்தருளியுள்ள செல்வ விநாயகர் திருவருள், என்றாராம். வியப்பும் மகிழ்வும் அடைந்த சின்ன மருது, உமக்கென்ன சன்மானம் வேண்டும்?" என்றாராம். கணக்கர், எனக்கு ஒன்றும் வேண்டா. அரசரே, இதோ எங்கள் செல்வ விநாயகர் கோவிலுக்கு ஏதாவது தர்மம் செய்தல் போதும்,' என்றாராம். அக்கணமே சின்ன மருது கணக்கர் கையில் இருந்த வெள்ளோலையை வாங்கி, நாலு செய் நிலங்களை மானியமாக எழுதிக்