பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. நம் கடமை வெள்ளை மருது வீர விளையாட்டுகளில் தலை சிறந்த வல்லாளன். நாட்டின் நிருவாகத்தைப் பற்றிய கவலை அவனுக்குச் சிறிதும் இல்லை. காலத்தையெல்லாம் வேட்டையாடுவதிலேயே அவன் செலவழித்தான். அசாதாரணமான தோற்றமும் பலமும் பொருந்திய அவனுக்கு அடர்ந்த காடுகளில் நுழைந்து கொடிய விலங்குகளை வேட்டையாடுவதில் விருப்பம் அதிகம். அவன் மிக உறுதியான ஆர்க்காட்டு ரூபாயைக் கை விரல்களாலேயே வளைத்துவிடுவானாம். அவன் நாடாளும் எவ்விதப் பொறுப்பும் கவலையுமின்றி வீர விளையாடல்களை விரும்பி எங்கும் சுற்றித் திரிந்த வண்ணம் இருந்தான். எப்போதாவது வெள்ளை மருது தன்பால் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிற ஐரோப்பிய நண்பர்களைச் சந்திக்கத் தஞ்சைக்கும் திருச்சிக்கும் மதுரைக்கும் வருவது வழக்கம். வெள்ளை மருதுவின் நண்பர்களில் யாருக்கேனும் பெரிய வேட்டை ஒன்றுக்குப் போக விருப்பம் தோன்றினால் இவனுக்கு ஒரு செய்தி சொல்லி விடுவது போதும். களத்திலே காணலாம் வெள்ளை மருதுவை. அவ்வாறே எவ்வித வீர விளையாட்டிலும் யார் கலந்து கொள்ள நினைத்தாலும் சரி; அவர்களை முன்னின்று அழைத்துச் சென்று, வெற்றியும் புகழும் தேடிக் கொடுத்து, அவர்கள் உடம்புக்கும் உயிருக்கும் தீங்கில்லாமல் கொண்டு வந்து சேர்க்கும் பொறுப்பு நம் பெரிய மருதுவையே சார்ந்தது. பேய்வாய்ப் புலி ஒன்று எதிர்ப்பட்டால், எத்தனை வெள்ளை ஐரோப்பியர்கள் வேட்டைக்காரர்களோடு சூழ நின்றாலும், அப்புலியைப் பாய்ந்து பிடித்துக் கொன்று தீர்க்க வெள்ளை மருதே முதன் முதலில் தாவுவான். பெரிய மருதுவின் இத்தகைய வாழ்க்கை, பாதுகாப்பு நிறைந்த நகர வாழ்க்கை வாழ்பவர்களுக்குப் பொருளற்றதாகவும் சோம்பேறித்தனம் நிறைந்ததாகவும் தோன்றும். ஆனால், உண்மையில் அடர்ந்த காடுகள் செறிந்ததும் மக்களைக் கொன்று குவிக்கும் கொடிய விலங்குகள் நிறைந்ததுமான ஒரு நிலப்பகுதியில் பெரிய மருதுவின் இத்தகைய வீர வாழ்க்கை மிக்க பயன் நிறைந்து விளங்கியது. இக்கீழ்த்திசை நிம்மிராட்டிடமிருந்து நான் 1795 ஆம் ஆண்டில் மதுரையில் மிக இளைய சுபேதார்களுள் ஒருவனாய் இருந்தபோது அன்புக்கும் கவனிப்பிற்கும்