பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருது.ாண்டியர் 4 நெஞ்சிலெல்லாம் மூட்டும் திருப்பணியைத் தடையின்றிச் செய்யும் பொருட்டு, வெள்ளைக் கொடுங்கோலர்களின் பருந்து விழிகளில் 芮 فتم: கொண்டிருப்போமோ? ஆண் பிள்ளைகள் அல்லோமோ? என்று வீர நெஞ்சம் விம்மித் துடிக்க, தமிழ் அகத்தின் கடல்களில் கப்பலோட்டிய குற்றத்திற்காக இரு ஜன்மச் சிறைத் தண்டனை பெற்றார் தேச பக்தர் சிதம்பரனார்: கண்ணற்ற கண்ணனூர் இருட்சிறையில் தள்ளப்பட்டார்: அங்கே ஏகாதிபத்தியத்தின் கொடுமைகள் எத்தனையுண்டோ அத்தனைக்கும் இலக்கானார். மனைவியாரையும் மக்களையும் பிரிந்த வீர சிதம்பரனார். சிறையில் மாடு போலச் செக்கிழுத்தார். அங்குக் கையெரிய மனமொடியக் கல்லுடைத்தார். இவ்வாறு சிதம்பரனார் மூட்டிவைத்ததியாகத் தீயில் எத்தனையோ தமிழ் வீரர்கள் தங்கள் குருதியையே நெய்யாகக் கொட்டினார்கள் எலும்பையே ஆகுதியாக இட்டார்கள். உயர்த்திப் பிடித்த கொடியை ஒரு நாளும் தாழ்த்த மாட்டேன்' என்று அரிமா என முழங்கித் தடியடிபட்டு, மண்டை பிளக்கப் பெற்று, தன் குருதி வெள்ளத்தால் தமிழ் மண்ணைத் தூய்மையுறச் செய்த திருப்பூர்க் குமரனை எவரே மறப்பர்? பாரதியாரை, சிதம்பரனாரை, குமரனைப் போல நாட்டின் விடுதலைக்காகப் பாடு பட்டுச் சாவையும் மகிழ்வோடு தழுவிய எத்தனையோ வீரர்களைத் தமிழகம் ஈன்றது. எண்ணிலடங்கா - பெயரறியா - வீரர்களடங்கிய கூட்டம் அது. ஆனால், அவருள் சிலரையே அறிவோம் நாம. இந்தியாவின்-இன்பத் தமிழகத்தின் விடுதலைக்காகத் தங்கள் நாட்டை, மனைவியை, மக்களை, நல்லுறவை எல்லாம் இழந்து, தம் உயிரையும் துறந்த அம்மேலோர்களது குழுவினைச் சார்ந்த தலைமை சான்ற இரு பெருவீரர்களைப் பற்றியே சிறப்பாக இந்நூலில் படிக்கப் போகிறோம். தமிழகத்தின் மானத்தைக் காக்கத் தங்கள் இன்னுயிரையே காணிக்கையாகக் கொடுத்த அவ்விணையற்ற வீரர்களது வரலாறு என்றென்றும் நம் இதயங்களில் வைத்துப் போற்றிப் பயனடையத் தக்க தகுதி படைத்ததாகும். பண்பும் பயனும் நிறைந்த அத்தமிழ் மறவர்தம் தீர வாழ்வை, தியாகப் பாதையை அறியுந்தொறும் நம் அகக்கண்களுக்கு நம்மை ஈன்றெடுத்த இன்பத் தமிழகம் எவ்வாறு புரட்சியின் தாயகமாய்ப் பொலிவுற்று விளங்கியது என்னும் வாய்மை புலனாகும்.