பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 200 புலப்படுத்துகின்றனவாம். இவ்வாதாரங்களிலிருந்து விஜய இரகுநாதராயத் தொண்டைமான் அவ்வமயம் சிவகங்கையை ஆண்டு கொண்டிருந்த வீரர் முத்துவடுகநாத உடையத் தேவரோடும், அவர் அமைச்சர் தாண்டவராயப் பிள்ளையோடும் போரில் இறங்கியிருந்தார் என்பது விளங்குகிறது என்றும், அவ்வாறு அவர் போரில் குதிக்கக் காரணம் 1759 - ஆம் ஆண்டு முதல் சிவகங்கை மன்னருக்கு அவர் கொடுத்திருந்த கடனைத் திருப்பிப் பெறப் பன்முறை முயன்றும் பயனற்றுப் போகவே, முத்து வடுகர் தனக்குத் தர வேண்டிய பாக்கிக் கடன் தொகையான இரண்டு இலட்சம் சச்கரங்களையும் திருப்பி வாங்கத் தன் ஆள்களை அனுப்பியுள்ளதாக வெள்ளைக் கும்பினிக்கு 1759 நவம்பரில் தொண்டைமான் கடிதம் எழுதியதாகவும், கவர்னர் போருக்குத் தயாராயிருக்கும்படி தொண்டைமானுக்குப் பதில் கடிதம் வரைந்ததாகவும் அதன்படி பணம் வாங்க அனுப்பிய ஆள்களைத் தொண்டைமான் திரும்பி வரும்படி உத்தரவிட்டதாகவும் புதுக்கோட்டை மானுவல் கூறுகிறது. மேலும், அந்நூலின் ஆசிரியர் தொண்டைமான் சென்னைக் கவர்னருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் முத்துவடுகநாதர் சிவகங்கைச் சீமையைச் சந்தா சாகிபுவின் படையெடுப்பினின்றும் காப்பாற்றும்பொருட்டுத் தன்னிடம் பத்திரம் எழுதிக் கொடுத்துவிட்டுக் கடன் வாங்கியதாகவும், அதை இன்னும் திருப்பித் தரவில்லை என்றும், ஆர்க்காட்டு நவாபு கேட்கும் போது சிவகங்கை மன்னர் அக்கடனைத் திருப்பித் தரும்படி சென்னை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எழுதிய செய்தியையும் குறிப்பிடுகிறார். இறுதியாகச் சிவகங்கை மன்னர் பணத்தைக் கொடுத்திருக்க முடியாது. எனவே, தொண்டைமான் படையும் பணம் வசூலிக்கப் பாய்ந்திருக்கும், என்று எழுதியுள்ளார். A Generaj History of Pudukkottai State. pp : 233,253. Listsrå5. 21. (1) மானங்காத்த மருது பாண்டியர், பக். 57. (2) இனவுணர்ச்சியைச் சற்றேவிலகி இரும்பிள்ளாய் என்று கூறிவிட்டு உண்மையைக் காணவே ஆராய்ந்து பார்க்கினும் வீரமங்கை வேலு நாச்சியைத் தமிழகத்தின் ஜான்சி ராணி என்று போற்றுவதைவிட, ஜான்சி ராணியை வட நாட்டு வேலு நாச்சி' என்று புகழ்வதே சாலப் பொருத்த முடையதாகத் தோன்றுகிறது. (3) வீரத் தமிழகம் - பி. பூரீ-பக்-150 22. கர்நாடக ராசாக்கள், பக்கம். XVI;111-2. 23. (1) Caldweis's History of Tinnevelly, p.211. (2) பிற்சேர்க்கை எண் IV. (3) A General History of the Pudukkottai State, p.254.