பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 208 மலையைத் தாக்க எங்கள் வீரர்கள் மனம் துணியவில்லை, என்று கூறும் காரணம் மிக்க சுவையானதன்றோ? கூலிப்படைக்குத்தான் எவ்வளவு தெய்வ பத்தி1 (ii) It is needless for us to mention that it was not timidity but religious awe that kept back the Thondaiman's peons. Piranmalai temple had been heid in reverance for centuries, as the God at the place is the subject of one of the hymns of Sambandar the celebrated Siva Saint of Seventh century. 'rhe peons must have considered it a dreadfui sacrilege to attack the pagoda. - A General History of the Pudukkottai State - p.314. 79. History of Madras Army, Volume ill-Page 50. 80. காளையார் கோவில் என்று இந்நாளில் வழங்கும் திருநகர், சங்க இலக்கியங்களிலேயே பலம் பொருந்திய கோட்டையாய் விளங்கியிருக்கிறது கானப்பேரெயில்' என்று அந்நாளில் மக்களால் போற்றப்பட்ட அவ்வூரைப்பற்றிய குறிப்புகள் சங்க நூலாகிய புறநானூற்றில் உள்ளன. புறப்பாட்டு, 21 பார்க்க. இக்கோட்டை - கோயில் - ஊரில் சிறப்புப் பற்றி அறிஞர் கால்டுவெலும் கர்னல் வெல்ஷலம் தம் நூலுள் விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளனர். (i) Military Reminiscenees by Welsh chapter IV. (ii) Caldwell's History of Tinneveily, Chap. IX (iii) Journal of indian History, Vol. XXVIII, Part ili, No.84. 81. () (அ) காளையார் கோவில் போரைப் பற்றிய செவிவழிச் செய்தியாகப் பல கிராமியப் பாடல்களும் கதைகளும் வழங்கி வருகின்றன. மருதுவின் படையில் சின்னச்சிட்டான் பெரிய சிட்டான் என்னும் இரு படை வீரர் இருந்தனர். கம்பெனிப் படையைச் சேர்ந்த ஒரு கர்னலை அவர்கள் விரட்டி வருகையில் வெள்ளைத்துரை விடுதலை வீரர்களின் வேல் கம்புக் குத்தையும் வாங்கிக் கொண்டு, செங்கோட்டை என்னும் ஊருக்கு அருகிலுள்ள வைகையாற்றின் கரையில் நீண்டு வளர்த்த நாணற்புதரில் பதுங்கிக் கொண்டான். சின்னச் சிட்டானும் பெரிய சிட்டானும் பலவிடங்களிலும் தேடினர். பின்னர் நாணலினூடே பறங்கித்துரை பதுங்கிக்கிடப்பது கண்டு, வேலாலும் வாளாலும் அவனைக் கொன்று தீர்த்தனர். இந்நிகழ்ச்சியை மக்கள், 'காளையார் கோவிலின் கர்னல் துரையவன் காட்டைக் கடந்துசெங் கோட்டைவந்து நீள வளர்ந்திட்ட நாணலுக் குள்ளே நெருங்கிப் பதுங்கிக் கிடக்கிறான்பார்'