பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

209 பேராசிரியர் ந.சஞ்சீவி என்று இரு சிட்டான்களும் கூறியதாக வாய்ப்பாடலாகப் L.j frtqவருகின்றார்கள். (ஆ) கம்பெனியானோடு கடும்போர் நடத்திக் கொண்டிருந்த காலத்தில் மருதுவின் படைதிருப்புவனம் சேர்ந்தது. கடந்த சில தினங்களில் பெரும்போர் புரிந்திருந்தமையால் மிகவும் சோர்வுற்றிருந்தது சிவகங்கைப் படை. ஆனால், தங்கள் சோர்வினை மாற்றார் அறியக்கூடாது என எண்ணினர் மருது சகோதரர்கள், ஒரு யோசனை செய்து, அதன்படி நடக்குமாறு தங்கள் படைகட்குக் கட்டளையிட்டார்கள் திருப்புவனக் கோட்டையின்மேல் ஆயிரம் வீரர் நள்ளிரவில் தாவி ஏறி நின்றனர்; இரு கைகளிலும் பெரிய தீப்பந்தங்களை வைத்துக் கொண்டு, அவற்றைச் சுழற்றிச் சுழற்றி வேகமாக நடப்பது போல நடித்தனர். ஆயிரம் வீரர் பல்லாயிரம் வீரராய்க் காட்சி அளித்தனர் பகைவரின் கண்களுக்கு அஞ்சி ஒடியது ஆங்கிலப்படை (இ) காளையார் கோவில் காட்டில் குண்டடி பட்ட புளி என்னும் மரம் ஒன்று இன்றும் இருக்கிறது (பார்க்க: பிற்சேர்க்கை 1-படம்). மருதரசர் கம்பெனியான எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் போது பீரங்கியால் அவர் மார்பைக் குறிபார்த்துச் சுட்டானாம் ஒரு வெள்ளைத் துரை. மருதரசர் மார்பில் படவேண்டிய குண்டு தெய்வாதீனமாகத் தப்பி விட்டது. தங்கள் நாட்டு அரசனை மாய்க்க வந்த குண்டைத் தன் மார்பிலே மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டதாம் தலை சிறந்த தமிழ் வீரனைப் போல அங்கு ஓங்கி உயர்ந்து நின்று கொண்டிருந்த ஒரு புளியமரம். பீரங்கிக் குண்டு அப்புளியமரத்தைத் துளைத்துக் கொண்டு வெளியே சென்றது. ஆயினும், மரம் சாயவில்லை. கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட கட்டைப் புளியமரம்' தொலைந்தே போய்விட்டது. ஆனால், தமிழகத்தின் மானங்காத்த மருதரசரைக் காப்பாற்றிய புளியமரம் இன்றும் தலை நிமிர்ந்து நின்று பழைய வரலாற்றைப் பேசாமல் பேசிக் கொண்டிருக்கிறது என்று இன்றும் கருதுகிறார்கள் சிவகங்கை மக்கள். (ii) வீரபாண்டியக் கட்டபொம்மன் வரலாற்றைச் சிந்து வடிவில் பாடியுள்ளார் தேசபத்தி கொண்ட பிற்காலத் தமிழ்ப் புலவர். ஆனால், தொண்டைமானின் துரோகத்தையும் வீரமாகக் கருதி அவனைத் தெலுங்கிலே போற்றிப் பாடியுள்ளார் தெலுங்கு மொழிப்புலவர் ஒருவர். 'தொண்டைமான் விஜயமு' என்ற அந்நூலில் வரும் ஒரு குறிப்பு. காளையார் கோவில் போரைப் பற்றிப் படித்த நாம் அறிய வேண்டுவதொன்றாகும். மருது பாண்டியரும் ஊமைத்துரையும் கம்பெனியானை எதிர்த்துப் போர் புரிந்து கொண்டிருக்கும் நாளில் அழிக்க முடியாத தங்கள் காட்டரணை எண்ணி எண்ணி இறுமாப்புக் கொண்டார்களாம். ஆங்காங்கே மண்ணிலே குழிபறித்துப் பாத்திரங்களில் வெடிமருந்துகளை வைத்தும், மரங்களின் மீது