பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

213 பேராசிரியர் ந.சஞ்சீவி (இப்படிக்கு ஒப்பம் பெரிய மருது சேர்வை) படைத் தலைவன் கத்தியை வைத்துச் சத்தியம் செய்து கொடுத்தபடி நடக்கவில்லை. ஜமீனைக் கெளரிவல்லப உடையத் தேவனுக்கே கம்பெனியாட்சி உரிமையாக்கியது. பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் - இரண்டாம் பாகம் - பக்கம். 328–31. மேற்கண்ட மரண வாக்குமூலத்தில் 6-ஆம் பிரிவின் இறுதியில் அமைந்துள்ள வாசகத்தின் உண்மையை - உட்பொருளை விளங்கிக் கொள்ள இயலவில்லை. (ii) The Maroothoos were captured and consigned to the gallows. Thus the zamindary became an estate to Government. By a proclamation of 6th July 1801, Government installed as zamindar Gowry Vasiaba Tevar, who was a collateral descendant of the progenitors of the first Zamindar Sasivarne Tevar. The Permanant settiement of the estate was made with him under a Sunnad-i-Milkeut (deed of agreement) in April 'i 803, - Madras Manual of Administration, Vol.1, p.55. (iii) 1829 ஆம் ஆண்டு வெள்ளையரால் அரச பதவியில் அமர்த்தப்பட்ட உடையத்தேவன் காலமானான். இவனுக்குப் பின் சிவகங்கைச் சீமை உரிமை பற்றிச் சற்றேக்குறைய ஐம்பது ஆண்டுகட்குத் தொடர்ந்து நடந்த வழக்கின் சுருக்கத்தை மதறாஸ் மானுவலும், விரிவான Golossă1565&T 650 Lääsä1560975 QāsāTL 'Origin of Sivaganga Zamindari and its litigations' group QLGB5Igth Rogéléspot. (iv) மருது பாண்டியர் ஆண்ட சிவகங்கைச் சீமையின் பரப்பு, மக்கள் தொகை, வருமானம் ஆகியவை பற்றி Madras Manual தரும் குறிப்பு: This Zamindary is in Madura District. Its area is 1,551 square miles and its population (1881) 432, 428 living in 1,485 viisage and 84,912 houses. The peshcush paid to Government is Rupees 25,644. (w) மருதுவுக்குப் பின் அவர் மனைவியர்க்கு ஓரளவு உதவி நிதி கொடுத்து அரசாங்கம் ஆதரித்ததென்பது சில ஆதாரங்களால் தெரியவருகிறது. மருதுவின் மரண வாக்குமூலத்தையும் கர்னல் அக்கினியூவால் கவுரி வல்லப தேவருக்கும் சென்னை அரசாங்கத்திற்கும் எழுதப்பட்டதாகக் கருதப்படும் இரு கடிதங்களையும் துணையாகக் கொண்டு மருதுவின் உறவினர் ஜமீன் உரிமையை நாடிப் பின்னாளில் பெரிய வழக்காடினர். ஆனால், வெற்றி பெறவில்லை. கர்னல் அக்கினியூவால் எழுதப்பட்டனவாக எண்ணப்படும் கடிதங்கள்