பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 பேராசிரியர் ந.சஞ்சீவி போலச் சீறி எழுந்தான். வீரபாண்டியனது கோபக்கனல் கண்டான் ஆலன் என்னும் ஆங்கில அதிகாரி ஆறாயிரம் பொன் கொடுத்தால் போதுமப்பா இந்தத் திக்கிற்கே திரும்போம்' என்று நயவுரை பகர்ந்தான். உள்ளத்தில் நஞ்சும் உதட்டில் தேனுமாய் ஆலன் பேசியது கேட்டான் வீரபாண்டியன் நகைத்தான். நயம், பயம் இரண்டிற்கும் வீரபாண்டியன் பணியாதது கண்ட அதிகாரிகளுக்கு ஆத்திரம் பொங்கியது. 'உன்னையும் உன் அரசையும் அழிப்பதே எங்கள் வேலை' என்று வெம்பியது அவர்கள் உள்ளம். ஆனால், வீரபாண்டியனோ, எதற்கும் அஞ்சினானில்லை. 'ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று." என்ற குறள் நெறி நிற்க அவ்வீரன் உறுதி கொண்டான். நேருக்கு நேர் நின்று போர் புரிய மாட்டாத கோழை முதுகில் குத்த வருவது போல, வெள்ளை அதிகாரிகள் வீரபாண்டியனை எவ்வாற்றானும் வெல்ல எண்ணற்ற வஞ்சகச் சூழ்ச்சிகள் செய்யலானார்கள்; பாளையக்காரர்கட்கு இடையே பிரித்தாளும் சூழ்ச்சியை வெற்றியாகக் கையாண்டு. அவனுக்கெதிராகப் பழியையும் பகையையும் பெருக்கினார்கள். அதோடு அவர்கள் வீரபாண்டியனைத் துன்புறுத்தித் தங்கள் காரியத்தைச் சாதிக்கவும் திட்டமிட்டார்கள். கம்பெனியின் வரி வசூலிக்கும் கலெக்டரான ஜாக்ஸன், ஒரு வாரத்திற்குள் தன்னை நேரில் கண்டு பேசவேண்டுமென்று வீரபாண்டியனுக்குச் செய்தி அனுப்பினான். வீரபாண்டியன் அதை விரும்பவில்லை. என்றாலும், சுற்றுச் சூழ்நிலை காரணமாக, நேரிலேயே தனியாகவே கலெக்டரைக் காண்போம்; நம் உறுதியைக் காட்டுவோம்; அவன் பகையைத் தொலைப்போம்,' என்று கருதினான்; ஆயினும், அவன் தம்பியரது வற்புறுத்தலால், தக்க படைகள் சூழப் பல்லக்கில் ஏறித் திருநெல்வேலி சென்றான். வீரபாண்டியன் தன்னைக் காணப் படைகள் சூழ வருவது அறிந்தான் ஜாக்ஸன். அவன் பலத்தில் அவனுக்கே நம்பிக்கை இல்லை. அவன் வீரபாண்டியனை நெடுந்தொலைவு இழுத்தடித்து அவமானப்படுத்தத் திட்டமிட்டான் திருநெல்வேலி, குற்றாலம், திருவில்லிபுத்தூர், சங்கர நயினார் கோவில், திருச்சுழி, அலங்கா நல்லூர், கமுதி என்று இவ்வாறு 400 மைல் தூரம் அவனை இழுத்தடித்தான். இக்கொடுமை 23 நாள்கள் நடந்தது. நாடாளும் மன்னனுக்கு நாடோடிகள் செய்த அவமானம் என்னே! நினைத்தாலும் நெஞ்சம் குமுறுகிறது! இறுதியாகக் கலெக்டர் ஜாக்ஸன் இராமநாதபுரத்தில் வீரபாண்டியனைக் கண்டு பேச இணங்கினான். இந்த வெள்ளையன் எங்கேதான் போவான்! போகட்டுமே இலங்கை போனாலும் தொடருவேன்! இவன் நெஞ்சாழத்தைக் காணாமல் திரும்பேன்' என்று உறுதி கொண்டிருந்த