பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 10 வீரபாண்டியனும் இராமநாதபுரத்தில் ஆபத்து எதுவும் நேர்ந்தால் உதவும் பொருட்டுச் சுற்றிலும்தன் படைகளை நிறுத்தி வைத்துவிட்டுக் கலெக்டர் ஜாக்ஸன் தங்கியிருந்த இராமலிங்க விலாசம் என்னும் மாளிகையினுள் நுழைந்து மேல் மாடிக்குச் சென்றான். கட்டபொம்முவின் வீரத் தோற்றத்தைக் கண்ட ஜாக்லன் வெகுண்டான் கோபக்கனல் தெறிக்கப் பொய் மலிந்த குற்றச் சாட்டுகளை எல்லாம் வீரபாண்டியன் மீது வீசினான். அவற்றையெல்லாம் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்த கட்டபொம்மனும் தன்மீது சாட்டப்பட்ட ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் கணிர் கனிர் என்று பதிலுரைத்து, மமதை கொண்ட ஜாக்ஸன் வாயை அடக்கினான். வெல்லுஞ்சொல் வேறொன்றும் இல்லாதவாறு வீரபாண்டியன் கூறிய தீர மொழிகளைக் கேட்ட வெள்ளைக் கலெக்டர், அறிவும் அமைதியும் இழந்து ஏற்கெனவே திட்டமிட்டு மறைந்திருக்கச் செய்த கூலிப்படைகளை வெளியே வருமாறு கூவினான். பிடி கட்டபொம்மனை பூட்டு விலங்கை' எனக் கதறினான். வஞ்சகனது கள்ளத்தை அறிந்த கட்டபொம்மன் கை, உடை வாளைப் பற்றியது. அவன் உடல் துடித்தது. இரத்தம் கொதித்தது. அக்குரிசில் சரேலென எழுந்தான்; கலெக்டர் ஜாக்ஸனை ஒரு முறை உற்றுப் பார்த்துப் புன்னகை புரிந்தான். "நீயும் ஒரு மனிதனா' என்று கூறுவன போலிருந்தன அவன் பார்வையும் சிரிப்பும். நரியின் புதரில் கால் வைத்தது நம் தவறு." என நினைத்துக் கொண்டே மாடியை விட்டுக் கீழே இறங்கினான் கட்டபொம்மன். அச்சமயம் ஆணவமே வடிவெடுத்த ஜாக்ஸன், நில்! எனக் கூறி வீரபாண்டியன் மடியைப் பிடித்து இழுத்தான். வீரபாண்டியன் உடலும் உள்ளமும் நெருப்பாயின. அவன் உந்தித் தள்ளினான். அலறிய வண்ணம் உருண்டான் ஜாக்லன். எசமானனது அலறலைக் கேட்ட கம்பெனி வீரர்கள் கட்டபொம்மன் மீது பாய்ந்தார்கள். எசமானனைப் போலவே சிறுமதி படைத்த தளபதி கிளார்க்கு என்பவன் வீரபாண்டியன் மீது வாளும் கையுமாகப் பாய்ந்தான். பரதேசிக் கூட்டத்தின் வெறிச் செயலைக் கண்ட கட்டபொம்மன் தோள்கள் துடித்தன. அவன் உருவினான் வீரவாளை, சிங்கம் போலக் கர்ச்சித்தான்; எதிர்த்தோருடன் தனியனாய் நின்று போராடினான். அதில் பாஞ்சைப்பதியான் வாளுக்குப் பலர் இரையாயினர். இந்நிலை கண்ட தளபதி கிளார்க்கு வீரபாண்டியனை எதிர்த்துச் சினம் கொண்ட பாம்பு போலச் சீறினான். இருவருக்குமிடையே கடும்போர் - வாட்போர் மூண்டது. முடிவில் வீரபாண்டியன் தமிழ் மண்ணின் உரிமையைத் தட்டிப்பறிக்க நினைத்த வெள்ளைத் தள்பதியைத் தன் கூர்வாளால் வெட்டி வீழ்த்தினான். மண் வெறி கொண்ட தளபதி மண்ணில் உருண்டான். இதற்கும் இராமலிங்க விலாச மாளிகையின் புறத்தே இருந்து வீரபாண்டியனது சிங்கக் கர்ச்சனை கேட்டு ஓடி வந்த மறவர் படைக்கும் கம்பெனிப் படைக்குமிடையே பெரும்போர் எழுந்தது. அப்போரில்