பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 12 மேஜர் பானர்மன் போருக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்தான். எனினும், இரத்தம் சிந்தாமலே TuTEುಣ6ು பாஞ்சாலங்குறிச்சியினின்றும் வெளியேற்றிக் கைது ೧೯u சதி புரிந்தான் தூதுவர் வாயிலாகச் சமரசம் பேசும் பொருட்டுக் கட்டபொம்மனைப் பாளையங்கோட்டைக்கு வரும்படி அழைத்தான். ஆனால், வெள்ளையரது கள்ளமெல்லாம் ஆதி முதல் நன்கறிந்திருந்த கட்டபொம்மனோ, பஞ்சாங்கத்தில் நாள் நன்றாக இல்லை எனப் பதிலுரைத்து ஏய்க்கலானான். வீரபாண்டியனை நம்பிப் பயனில்லை என்பதை அறிந்தான் மேஜர் பாளர்மன் இனியும் காலநீட்டிப்புச் செய்வது தற்கொலைக்கு ஒப்பாகும், எனக் கருதினான். எனவே, உடனே படையெடுக்கத் துணிந்தான். அப்பொழுது பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரர்களுக்குக் குலதெய்வமான தேவி ஜக்கம்மாளுக்குத்திருவிழா நடந்து கொண்டிருந்தது. அதற்காகப் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையிலிருந்து பாதிக்கு மேற்பட்ட வீரர்கள் சென்றிருந்தார்கள். அவர்களுடன் வீரபாண்டியனுடைய இரு தம்பியரும் மற்றும் பலரும் போயிருந்தனர். இந்த உண்மையை எவ்வாறோ ஒற்றி அறிந்த மேஜர் பானர்மன், பகலவன் ஒளி மறையப் பேரிருள் எங்கும் பரந்த நேரத்தில் தன் படைகளைக் காற்று வேகத்தில் நடத்திச் சென்று, பாஞ்சாலங்குறிச்சியின் எல்லையை நள்ளிரவிற்குள் எட்டிப்பிடித்தான். ஏற்கெனவே பாளையங்கோட்டையில் நடப்பதை எல்லாம் அறிந்து தெரிவிக்குமாறு வீரபாண்டியன் அமைத்திருந்த ஒற்றர்கள், பானர்மன் படை திரட்டி வரும் செய்தியை மின்னல் வேகத்தில் கட்டபொம்மன் காதுகளுக்கு எட்டுமாறு செய்தார்கள். நள்ளிரவில் வீரபாண்டியனுக்குச் செய்தி கிடைத்தது. ‘என்ன ஆணவம் இந்த வாணிபக் கூட்டத்திற்கு' என்று அவன் வெகுண்டான். 'விடியுமுன் பாஞ்சை வீரர் யாவரும் கோட்டைக்குள் திரள வேண்டும்!" என்று ஆணை பிறப்பித்தான். அவனிட்ட கட்டளை திக்கெட்டிலும் முரசறைந்து தெரிவிக்கப்பட்டது. தமிழ் மறவர் நாற்றிசையிலிருந்தும் வெள்ளமென விரைந்து வந்தனர்; ஆனால், அதற்குள் கம்பெனிப்படை கோட்டையைச் சுற்றி அணி வகுத்து முற்றுகையிட்டிருப்பதைக் கண்டனர். எனினும், அஞ்சாது அணி வகுப்பைக் கிழித்துக் கொண்டு உட்புகுந்தனர் ஊமைத்துரையும் அவன் இளவலும். மற்றவர்களும் தங்கள் உயிரனைய கோட்டைக்கு உற்ற தீங்கைக் கேட்டுத் தீயென உள்ளம் கனன்று ஓடி வந்து அரணுக்குள் நுழைந்தார்கள். கடும்போர் மூண்டது. கம்பெனிப்படையின் வசமிருந்த பேய் வாய்ப் பீரங்கிகள் அலறின. நெருப்பு மழை போலப் பாஞ்சைக் கோட்டையின் மீது தீக்குண்டுகள் பொழியப்பட்டன. ஆயினும், பாஞ்சை வீரர்கள் கலங்கவில்லை, ஈட்டிகளை எறிந்தும், கவண் கற்களை வீசியும், எதிர்த்து வந்த பகைவரைக் கண்டதுண்டமாக வெட்டியும் கடும்போர் புரிந்தனர்.