பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 14 வீரபாண்டியனுக்கு நாகலாபுரம், சிவகிரி, இராமநாதபுரம் ஆகிய இடங்களிலிருந்த பாளையக்காரர்கள் துணை புரிய முன் வந்தார்கள். அது கண்டு மகிழ்ச்சி கொண்ட கட்டபொம்மன், கோலார்பட்டியைச் Gs , அங்கு ஒரு நாள் இரவு தங்கினான். பொழுது புலர்ந்தது. எட்டையபுரத்தான் செய்த துரோகத்தால் உளவறிந்த கம்பெனிப் படைகள் வீர பாண்டியன் தங்கியுள்ள இடத்தை வளைத்துக் கொண்டதை அவ்வீரன் அறிந்தான்; உருவிய வாளுடன் வெளி வந்தான் எதிர்த்து வந்த எட்டப்பன் வீரர்களை வெட்டிச் சாய்த்தான். அண்ணன் ஆத்திரத்தைக் கண்ட தம்பி ஊமைத்துரையும் ஏனைய மறவரும் வீரப்போர் புரிந்தனர். அப்பயங்கரப் போரின் விளைவாகப் பலர் மாண்டனர். இதற்கிடையில் வீரபாண்டியனும் அவன் தம்பி ஊமைத்துரை உள்ளிட்ட பலரும் தப்பிச் சென்றனர். ஆனால், அமைச்சர் தானாபதிப்பிள்ளையும் அவர் துணைவர் பலரும் கைதாயினர். வீர பாண்டியன் மீண்டும் தப்பிவிட்ட செய்தி பானர்மன் நெஞ்சில் வேதனைத் தீயை மூட்டியது. ஆத்திரங் கொண்ட பானர்மன், வீர பாண்டியனுக்குத் துணை புரிந்த குற்றத்திற்காக நாகலாபுரம் பாளையக்காரரின் இளவலானசெளந்தரபாண்டியனையும் கைது செய்தான். கைது செய்யப்பட்ட தானாபதிப் பிள்ளையையும் செளந்தரபாண்டியனையும் விசாரிக்க நீதி மன்றம் ஏற்படுத்தினான் பானர்மன். இருவரும் விசாரிக்கப்பட்டனர். விசாரணையின் முடிவு பயங்கரம். இருவருக்கும் தூக்குத் தண்டனை அவர்கள் சொத்தெல்லாம் பறிமுதல் ஆம். பேயரசின் காட்டாட்சி பாணர்மன் ஆத்திரம் இதோடு அடங்கவில்லை. அவன் பாஞ்சாலங்குறிச்சி மக்களை வாட்டி வதைத்தான்; வீரபாண்டியனது குடும்பம் முழுவதையும் கைது செய்தான், ஆயுதம் தாங்கும் உரிமை யாருக்கும் இல்லையென்று அறிவித்தான். அந்தோ அடிமை வாழ்வின் கொடுமைதான் என்னே எங்கிருந்தோ வந்த பரதேசி வெள்ளையரிட்ட ஆணையால், வீர மறவர் அனைவரும் மணியிழந்த நாகம் போலாயினர். இத்தனையும் போதாதென்று வீரபாண்டியன் தலைக்கும் விலை வைத்தான் பாணர்மன்: நாற்றிசையும் ஆள்களை அனுப்பித் தேடினான் இறுதியில் ‘புதுக்கோட்டை மன்னன், வீர பாண்டியனைப் பக்குவமாய்ச் சிக்க வைத்துவிட்டான்,' என்ற செய்தி அறிந்தான் மகிழ்ந்தான். 1799 ஆம் ஆண்டு, அக்டோபர் திங்கள், 1 ஆம் நாள் வீரபாண்டியன். ஊமைத்துரை கைகளில் விலங்குகள் பூட்டப்பட்டன. புதுக்கோட்டை மண்ணில் அரசனாய் நுழைந்த கட்டபொம்மன் பகைவர் சூழ்ச்சியால் கைவிலங்கோடு கைதியாய் வெளி வந்தான். வீரபாண்டியன் சிறைப்பட்டான். தென்பாண்டி நாட்டில் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆதிக்கம் தலை விரித்தாடியது. பாளையக்காரர்களுடைய