பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 பேராசிரியர் ந.சஞ்சீவி 1801 ஆம் ஆண்டு, பிப்ரவரித் திங்கள் 8 ஆம் நாள் குலையநல்லூரில் முகாம் அடித்திருந்த கம்பெனித் துருப்புகளில் துப்பாக்கி தாங்கிய 900 வீரர்கள் காட்சியளித்தார்கள். வங்காளப் பீரங்கிப் படையும் இருந்தது. கூடாரமடித்த சிறிது நேரத்திற்கெல்லாம் செய்தி அறிந்த 1200 வீர மறவர்களடங்கிய கூட்டம், இருள் சூழ்ந்ததும் திடீரென்று துப்பாக்கி, ஈட்டி, கத்தி ஆகிய கொலைக் கருவிகள் கொண்டு கம்பெனி முகாமைத் தாக்கி நொறுக்கியது. எனவே, மீண்டும் தொடங்கியது போர். பாஞ்சாலங்குறிச்சியைச் - செந்தமிழ் நாட்டு உரிமையைக் காப்பதற்கான விடுதலைப் போர், ஊமைத்துரை தலைமை தாங்கி நடத்தும் உரிமைப் போராயிற்று. கம்பெனிப்படைகளும் அதிகாரிகளும் நடுக்கம் கொண்டார்கள். மறவர் சேனையைத் திருப்பித்தாக்கும் துணிச்சல் அவர்கட்கு இல்லை. அதோடு பிப்ரவரித் திங்கள் 9 ஆம் நாள் கம்பெனிப் பட்டாளத்திற்கு இருந்த மனநிலையை அப்பட்டாளத்தின் தளபதியாய் இருந்த வெள்ளை மேஜர் ஒருவன் கூறுவதைப் பாருங்கள்: "இங்கே எதிர்பாராத ஒரு சம்பவம் நிகழ்ந்தது. முதலாவதாக ஆறே நாள்களில் மந்திரத்தாலேற்பட்டது போன்ற ஒரு கோட்டையால் எதிர்க்கப்பட்டோம். இரண்டாவதாக, அதன் காவலாளர்கள் தொகை, எண்ணிலடங்காத வண்ணம் பெருகி இருந்ததுடன், எங்களைத் தாக்கவும் தயாராய் இருந்தது. ஆகவே, எங்களுக்கு அங்கு இருக்க வேண்டிய வேலையே இல்லை என்று ஒரு மனதாகத் தீர்மானித்தோம்.” இதிலிருந்து பாஞ்சை வீரர்களைக் கண்டு பலம் பொருந்திய பீரங்கிப்படை - கம்பெனிப் பட்டாளம் எவ்வளவு நடுங்கியது என்பது புலனாகும். ஆம், நீறுபூத்த நெருப்பாயிருந்த தமிழ் மக்கள் நெஞ்சம் - வேதனையால் குமுறிக் கொண்டிருந்த வீரர்கள் நெஞ்சம் எரிமலை போல வெடித்தது. அந்த எரிமலை கக்கும் கனலை வாரி வீசும் தீக்குழம்பைக் கண்டு கதி கலங்கிய கம்பெனிப் படை இரவோடு இரவாகப் புறங்காட்டி ஓடியது. ஓடும் வழியிலும் அதற்கு அனுமதி உண்டா? அதுதான் இல்லை. கம்பெனிப் பட்டாளம் பாளையங்கோட்டைக்கு மூன்றிலொரு பாகத் துரத்தில் சென்று கொண்டிருந்த நேரத்தில் - நள்ளிரவில் - ஊமைத்துரை படை காலனும் கண்டு அஞ்சும் வண்ணம் ஆரவாரித்துக் கொண்டு சென்று அவர்களைத் தாக்கியது. செத்தோம்! பிழைத்தோம்' என்று கம்பெனிப் பட்டாளம் பாளையங்கோட்டைக்குப் போய்ச் சேர்ந்தது. இந்த நிகழ்ச்சிக்குப்பின் வீர மறவர்கட்கும் வெள்ளைச் சிப்பாய்கட்கும் நடந்த போரில் பல இடங்களில் கம்பெனிப்படை முறியடிக்கப்பட்டது. அதோடு ஊமைத்துரை தென்பாண்டி நாடெங்கும் வெற்றிக்கொடி உயர்த்தினான். பதினைந்து நாள்களில் கணக்கற்ற பாளையங்களில் விடுதலை எழுச்சியும் வீரத் தீயும் கொழுந்து