பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 பேராசிரியர் ந.சஞ்சீவி கம்பெனியைச் சார்ந்த 4 அதிகாரிகளும், 44 சிப்பாய்களும் கொல்லப்பட்டார்கள் 13 அதிகாரிகளும் 254 சிப்பாய்களும் படுகாயமுற்றார்கள். ஆங்கிலேயரது தோல்வியும் பாளையக்காரரின் பாதுகாப்புத் திறனும் விளக்க முடியாத பெரிய அற்புதமாகவே தோன்றின. பாஞ்சைக் கோட்டையின் உச்சியில்.ஓர் ஆளும் தென்படவில்லை. ஆனால், ஈட்டிகளின் காடாய் அந்த இடம் விளங்கியது கோட்டையைத் தாக்க வந்த 120 ஐரோப்பியருள் 46 பேரே காயமின்றித் தப்பினர். கம்பெனிக்குத் துணையாக 1000 எட்டையபுரப் பாளையக்கார வீரர்களடங்கிய படையும் சேர்ந்து கொண்டு கோட்டையைப் பிளக்க முயன்றது. அதன் பலனாகக் கூலிப்படையின் வீரர்களுள் நூற்றுக்கணக்கானவர் தலைகள் தரைமீது உருண்டன. இவ்வாறு போரின் முதற்கட்டம் கம்பெனிப் படைக்குப் படுதோல்வியாய் முடிந்தது. கம்பெனி அதிகாரிகள் வெள்ளைக் கொடி வீசி ஒரு நாள் முழுதும் உயிர்ப்பிச்சை கொடுக்கும் படி ஊமைத்துரையின் சேனை வீரர்களிடம் கெஞ்சினார்கள். அடுபோரிலும் அறம் பிறழாத்தமிழ்ப் பண்பினன் அன்றோ ஊமைத்துரை ஒரு நாள் முழுதும் அவர்கட்கு அவன் ஓய்வு தந்தான்; ஒரு சிறு குழப்பமும் விளைவிக்கவில்லை. வீர மறவரிடம் விளங்கிய இந்தப் பெருந்தகைமையை வெள்ளை அதிகாரிகளே புகழ்ந்துள்ளார்கள். இந்நிகழ்ச்சி நடைபெற்ற ஒரு மாதம் இருபது நாள்களுக்குப் பின்னே கம்பெனிப்படை, கர்னல் அக்நியூ என்பவன் தலைமையில் பாஞ்சைக் கோட்டையைத் தாக்கத் துணிவு கொண்டது. பாஞ்சைப் பகுதியைப் பிடிப்பதற்கான இறுதிப் போரின் இறுதிக்கட்டம் கர்னல் அக்நியூ தலைமையில் 1801 ஆம் ஆண்டு, மே மாதம் 21 ஆம் நாளில் தொடங்கப்பட்டது. புதியனவாகக் கொண்டுவரப்பட்ட பெரிய பெரிய பீரங்கிகளின் துணையால் கோட்டை கடுமையாகத் தாக்கப்பட்டது. கோட்டையை எதிரிகள் தகர்ப்பதைத் தடுக்கும் பொருட்டுப் பாஞ்சை மறவர்கள் கம்பெனிப்படையை நோக்கித் திருப்பிச் சுட்டவண்ணம் இருந்தார்கள். இரு புறமும் சுடப்பட்ட பீரங்கிகளின் அலறல் எண்டிசையையும் அதிர வைத்தது. எங்கும் புகை மண்டலம் ஆயிற்று. கடைசியாக மே மாதம் 24 ஆம் தேதி வீரர்கள் நிறுவிய வெற்பனைய கோட்டைபிளவு கண்டு விழும்படி செய்வதில் கம்பெனிப் படைகள் வெற்றி கண்டன. கம்பெனிப் படைக்கு வெற்றிப் போதை தலைக்கேறியது. அப்போதைய வெறியில் அவர்கள் விரைந்து சென்று பாளையக்காரர்களைத் தாக்கினார்கள். கடும் போர் மூண்டது. கோட்டை இடிந்தாலும் கொள்கை இடியவில்லை வீர மறவர் படைகட்கு. நாற்புறமும் சுற்றி நின்று வெடிகுண்டுகளை வீசிக்கொன்ற கம்பெனிப் பட்டாளத்தைப் பாஞ்சை மறவர் எதிர்த்துத் தாக்கி, எமனும் அஞ்சப்