பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 22 போராடினர். பெரிய பெரிய மரங்களை எல்லாம் வெட்டிச் சாய்த்தனர்: ஆழமான அகழிகளை எல்லாம் தமது பாதுகாப்பிற்காக வெட்டினர்; முன்னேறும் கம்பெனிப் படைகளை முறியடிக்கப் பாடு பட்டனர். அம்முயற்சியில், விடுதலை வீரர்கட்கும் பேரரசு வெறியர்கட்கும் இடையே நடந்த போரில் ஒவ்வொரு தமிழ் வீரனும் காட்டிய தீரமும் தியாக உணர்ச்சியும் ஒவ்வொரு தனி நூலாக எழுதத்தக்கன.ஆம். அப்போது நடந்த அப்போர் யாரோ சிலருக்கு இடையே நடந்த அரசுரிமைப் போர் அன்று; பேரரசுப் பேயர்கட்கும் பெற்ற தாய் நாட்டின் விடுதலையைக் காக்கத் துணிந்த வீரமக்கட்கும் இடையே நடந்த உரிமைப்போர் அறப்போர். புரட்சி வீரர்கள் தாங்கள் வெட்டிய குழிகட்கு உள்ளிருந்து, விரைந்து வரும் கம்பெனிப் படைகளைச் சுட்டும், பொசுக்கியும், கொன்றும், சிதைத்தும் நாசமாக்கினார்கள். பாஞ்சைக்கோட்டை, பேரரசு வெறியர்கட்கு ஏற்ற கொலைக்களம் - கல்லறை - ஆயிற்று. ஆயினும், புரட்சி வீரர்கட்குப் போதிய ஆயுதம் இல்லை. ஆனால், கம்பெனிப்பட்ையிடமோ, கணக்கற்ற பீரங்கிகளும், கொலைக் கருவிகளும், எட்டையபுரத்தானைப் போன்றோர் தந்துதவிய ஏராளமான கூலிப்படைகளும் இருந்ததனால் நிலைமை இவ்வளவு மோசமாய் இருந்தும், வீர மறவர்பால் கொழுந்து விட்டு எரிந்த சினத்தியை, அவர்கள் காட்டிய வீர உணர்ச்சியை வரலாற்றிலேயே வேறெங்கும் காண இயலாது. அவ்வாறிருந்தும், இறுதியில் விலங்கு பலத்திற்கே அப்போதைய வெற்றி கிடைத்தது. எதற்கும் கலங்காத மறவர்கள் தங்கள் உயிரனைய புரட்சித் தோழர்கள் சில நாள்களில் பினமான கொடுங்காட்சி கண்டு கலங்கினார்கள். கடந்த மூன்று மாதங்களில் பாஞ்சைக் கோட்டையின் மண்ணுக்குக் கீழே பாதாளத்தில் நிலவறையிலே மிகக் கொடிய குண்டு மாரி பொழியும் நேரத்திலும் விடுதலை வேட்கையால் தமிழகத்தின் விடுதலைக்காகப் போரிடும் வீர மறவர்கட்குத் துணையாய் வாழ்ந்து வந்த மாதர் நல்லாரும், அவர்தம் மழலைச் செல்வங்களும் நச்சுக் குண்டுகளின் வெம்மை தாங்காமல் புழுவாய்த் துடித்தனர். சேர்த்து வைத்திருந்த உணவெல்லாம் தீர்ந்து தொலைந்தன. பசியாலும் நோயாலும் குடும்பம் குடும்பமாக மண் மகளின் மடிக்குள் மறைந்திருந்த தாய்மாரும், தள்ளாத கிழவரும், தவழும் குழந்தைகளும் தவித்தார்கள். "ஐயோ ஐயோ!' என்னும் ஒலி வினாடிக்கு வினாடி அதிகமாயிற்று. நிலைமை சமாளிக்க முடியாமற்போனதை அறிந்தான் ஊமைத்துரை. அவன்முன் இருந்த வழிகள் இரண்டே ஒன்று, மாற்றானுக்கு அடிபணிவது; மற்றொன்று மானத்தைக் காக்க வெளியேறுவது. ஊமைத்துரை ஆழ்ந்து சிந்தித்தான் 'மானத்தை விடுவதினும் சாவிற்குத் துணிந்து வெளியேறுவதே நலம். தமிழகத்தின் பிற பகுதிகட்குச் செல்வோம். நம்மை ஒத்த விடுதலை வீரர்களைத் திரட்டுவோம். வெறி கொண்ட வெள்ளையர் கும்பலை