பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. பெரிய மருதுவும் சின்ன மருதுவும் சுமார் இரு நூறு ஆண்டுகட்கு முன் பாஞ்சைப் பதியைப் போலவே வீரத்திலும் தியாகத்திலும் இணையற்று விளங்கிய பெருமை சிவகங்கைச் சீமைக்கு உண்டு. கி.பி.17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இதை ஆண்டு வந்த கிழவன் சேதுபதியின் காலத்தில் புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஜமீன்களைக் கொண்ட மறவர் நாடு சீரும் சிறப்பும் அடைந்து திகழ்ந்தது. 36 ஆண்டுகள் மறவர் நாட்டை ஆண்ட பின் கிழவன் சேதுபதி 1710 ஆம் ஆண்டில் இறந்து போனான். அதற்குப் பின் மறவர் சீமையில் அரசுரிமை குறித்துப் பெருத்த உள்நாட்டுப் போர் கிளம்பியது. 'எரிகிற வீட்டில் பிடுங்கியது ஆதாயம், என்று கருதிய புதுக்கோட்டை அரசர், தஞ்சை மராத்திய மன்னர், மதுரை நாயக்க மன்னர் ஆகியவர்களும் இந்தப் போரில் கலந்து கொண்டு, தத்தமக்கு வேண்டிய கட்சியை ஆதரித்தனர். கட்சியில் அவர்கள் கைக் கொண்ட பகுதிகள் போக, மீதியிருந்த மறவர் நாடு ஐந்து பகுதிகள்ாகப் பிரிக்கப்பட்டு மூன்று பங்கு கட்டையத் தேவன் என்பானுக்கும் மீதி இரண்டு பங்கு சசிவர்ணத் தேவனுக்கும் வழங்கப்பட்டன. சுமார் 1730 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் பயனாகச் சசிவர்ணன் பெற்றதே சிவகங்கை இராச்சியம். இந்தச் சசிவர்ண தேவன் சிவகங்கைச் சீமையைச் சுமார் 25 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். இவனுக்குப் பின் இவன் மகனான முத்துப் பெரிய வடுகநாத உடையணத்தேவன் பட்டம் எய்தினான். முத்து வடுகநாதன் அரசியலை ஏற்றுக் கொள்வதற்கு முன்பே தென்னாட்டில் அரசியலில் இருள் கவிய ஆரம்பித்துவிட்டது. தமிழகத்தின் அரசியல் பல்வகையாலும் பாழ்படல் ஆயிற்று. ஆர்க்காட்டு நவாபுவும், ஐதர் அலியும், ஆங்கிலேயரும், பிரெஞ்சுக்காரரும், டச்சுக்காரரும் தத்தம் ஆற்றலின் நிலை கண்டுணரத் தமிழகத்தைப் பயன்படுத்தலாயினர். தமிழர் நாடு கொலைக்கும். கொள்ளைக்கும், சூதுக்கும், சூழ்ச்சிக்கும் இரையாயிற்று. ஆர்க்காட்டு நவாபு ஆங்கிலக் கம்பெனியின் படைப்பலம் கொண்டு பிடித்த தென்பாண்டிச் சீமைகளில் தடி எடுத்தவனை எல்லாம் தண்டற்காரன்' ஆக்கித் தர்பார் நடத்தினான்; தமிழகத்தில் சுதந்தரமாக ஆட்சி புரிந்து வந்த