பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 26 தி சிற்றரசர்களுடைய நாடுகளை எல்லாம் வெள்ளை வெறியர்களது துணை கொண்டு தாக்கினான். இக்கொடுமைகளைக் கண்ட வீர மறவர் நெஞ்சம் கொதித்தது. அவர்கள் நவாபுவையும் அவனைக் கைப்பாவையாக்கிக் கொள்ளையடிக்கத் துடித்த கம்பெனிக் கூட்டத்தையும் முறியடிக்கத் திட்டமிட்டார்கள். இதை அறிந்த ஆர்க்காட்டு நவாபு ஆங்கிலக் கம்பெனியிடம் அடைக்கலம் புகுந்தான். அதன் பயனாக, 1772 ஆம் ஆண்டில் ஜெனரல் ஸ்மித்து என்பவன் மறவர் நாட்டின் மீது படையெடுத்தான் இராமநாதபுரத்தைத் தாக்கினான். அப்போது அச்சீமையை ஆண்டுவந்த ஒன்பது வயது சிறுவனான சேதுபதியையும் அவன் சார்பாளாய் நாட்டை ஆண்டு வந்த தாயையும் அவன் சகோதரியையும் சிறைப்படுத்தித் திருச்சிக்கு அனுப்பிக் காவலில் வைத்தான். இவ்வாறு இராமநாதபுரத்தில் வெற்றிக் கொடி உயர்த்திய வெள்ளைப் படையால் சிவகங்கையைத் தொடக் கூட இயலவில்லை. அங்கே அரசனாய் இருந்த முத்துவடுகநாதன் வயதானவனாயினும், சிவகங்கைச் சீமை என்றால் கம்பெனிப் பட்டாளத்திற்குச் சிம்ம சொப்பனமாய் இருந்தது. காரணம் விடுதலை வெறி கொண்டவீர மறவர்கள் நிறைந்த சிவகங்கைச் சீமையின் இரு கண்களாகவும் இரு கைகளாகவும் விளங்கினார்கள் இரு சகோதரர்கள். அந்த இரும்பு மனிதர்கள் பெயரைக் கேட்டதும் பறங்கிப் படை நடுங்கியது; ஆர்க்காட்டு நவாபுவின் தலை ஆட்டம் கண்டது. யார் அவர்கள்? அவர்களே பெரிய மருது, சின்ன மருது என்ற இரு உடன் பிறப்பாளர்கள் நம் நூலின் மாண்பு மிக்க தலைவர்கள். கட்டபொம்மு சகோதரர்களைப் போலவே பாரத நாட்டையும் அருமைத் தமிழகத்தையும் பரதேசியரான வெள்ளையரிடமிருந்து காப்பாற்ற, உயிரையும் துச்சமாய் மதித்து விடுதலைப் போர் நடத்திய மருது சகோதரர்களுள் மூத்தவன் பெயர் வெள்ளை மருது; இளையவன் பெயர் சின்ன மருது. ெ வெள்ளை மருது மாவீரன், வீரர்களை எல்லாம் தலைவணங்கச்செய்த பெருவீரன். அவனைச்சந்தித்த ஐரோப்பியர் அனைவரும், குஷ்வமிசத்தின் வழி வந்தவன், மாபெரும் வேட்டை நிபுணன், பாபிலோனியப் பேரரசின் தந்தை எனப் போற்றப்படும் நிம்ராடு போன்ற பெருவீரன் இவனே தமிழகத்திற்கு என்று எண்ணி, வியந்து மதிப்புக் காட்டினர். அத்தகைய வீரத்தலைவனாய் விளங்கிய வெள்ளை மருதுவுக்கு வேட்டை என்றால் பெரு விருப்பம். அவ்வீரப் பெருமகன் அடர்ந்த காடுகளில் நுழைந்து, கொடிய விலங்குகளை வேட்டையாடும் வீர விளையாட்டிலே தன் காலத்தையெல்லாம் கழித்தான். அவன் வாழ்க்கையே ஒரு வீர விளையாட்டுதான் கணையமரம் போன்ற கைகளையும், ஓங்கி உயர்ந்த கற்சிலை போன்ற தோற்றத்தையும், முறுக்கி விட்ட இரும்புக் கம்பிகள்