பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 பேராசிரியர் ந.சஞ்சீவி போன்ற தசை நார்களையும், பருத்த முண்டாக்களையும், மலை போல உயர்ந்த தோள்களையும், கூர்வாள் போலத் திருகி விட்ட மீசையையும், பரந்து விரிந்த மார்பையும், சிங்கம் போன்ற பார்வையையும் படைத்திருந்த வெள்ளை மருதைப் பார்த்தாலே ஒரு வகையான அச்சம் கலந்த வியப்புணர்ச்சி எவர் மனத்திலும் ஊடுருவிப்பாயும். அக்காலத்தில் புழக்கத்தில் இருந்த உறுதியான ஆர்க்காட்டு ரூபாயை ஒரு நொடியில் வளைத்துக் காட்டக் கூடிய ஆற்றல் அவன் கைவிரல்கட்கே இருந்தது என்றால், அவன் உடல் ஆற்றலை யாரால் அளவிட்டுரைக்க இயலும்? எவ்விதமான நாடாளும் பொறுப்பும் கவலையும் இன்றிக் காலும் மனமும் கண்ணும் விரும்பிய இடமெல்லாம் ஓயாது திரிந்து, தன் வீர விளையாடல்களைத் தொடர்ந்து நடத்தி வந்த அவனைக் காட்டு ராசா என்று கூறுவதே எவ்வகையிலும் பொருத்தம். எப்போதாவது வெள்ளை மருது தன்பால் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிற ஐரோப்பிய நண்பர்களைச் சந்திக்கத் தஞ்சைக்கும் திருச்சிக்கும் வருவது வழக்கம். வெள்ளை மருதுவின் நண்பர்களில் யாருக்கேனும் பெரிய வேட்டை ஒன்றுக்குப் போகத் தோன்றினால், இவனுக்கு ஒரு செய்தி அனுப்பிவிடுவது போதும் ஆஜானுபாகுவான தோற்றமுடைய மருதுவை அங்கே காணலாம். அவ்வாறே எவ்வித வீர விளையாட்டிலும் யார் கலந்து கொள்ள நினைத்தாலும் சரி, அவர்களை முன்னின்று அழைத்துச் சென்று, வெற்றியும் புகழும் தேடிக் கொடுத்து, அவர்கள் உடம்புக்கும் உயிருக்கும் தீங்கில்லாமல் கொண்டு வந்து சேர்க்கும் பொறுப்பு நம் பெரிய மருதுவையே சார்ந்தது. வேட்டைக்குச் செல்லும் போது பேழ்வாய்ப் புலி ஒன்று எதிர்ப்பட்டால் பெரிய மருது அடையக் கூடிய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தன் நண்பனாய் இருந்த ஐரோப்பிய துரை, வில்லும் வேலும் வாளும் ஏந்திய பலம் நிறைந்த வீரர் படை சூழ, உடலும் உள்ளமும் நடுங்கி நிற்கும் நேரத்தில் பெரிய மருது பாய்ந்து சென்று சீறி வரும் புலியின் வாலை இரு கைகளாலும் பிடித்து, இருபதடித்துரம் பரபர என்று இழுத்துச் சென்று. இரு பின்னங்கால்களையும் இறுகப்பற்றிக் கவண் போலச் சுழற்றி, ஓங்கித் தரைமீது அடிப்பான். ஆத்திரத்தோடு அவனைக் கடித்தெறிய அப்புலி தன் பேழ்வாயைத் திறக்கும். அப்போது பற்களை நறநறவென்று கடித்துக் கொண்டே தன் கால் தினவு தீர, புலி சாவ, அதைத் தன் காலின் கீழே போட்டுத் துவைப்பான், பின்பு அதன் வாயை இரு பிளவாகக் கிழித்துப் பற்களை ஆட்டிப் பிடுங்கி, அவற்றைக் கொண்டு வந்து நண்பர்கட்கு எல்லாம் காட்டி, நாற்றிசையும் அதிர வெற்றி நகை புரிவான். இத்தகைய வீர வாழ்க்கை வாழ்ந்த காட்டு ராசாவைப் பற்றி நமக்கு எழக் கூடிய ஓர் ஐயத்தைப் போக்கும் வகையில் பெரிய மருதுவை நன்றாக அறிந்தவனும், பின்னாளில் நண்பர்கள் என்ற நன்றி உணர்ச்சியும் அற்று