பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 பேராசிரியர் ந.சஞ்சீவி கடுஞ்சொல் அற்றவனாய் இருந்த அவன் நா அசைந்தால் நாடு அசையும் அவன் இட்டது சட்டம் மறவர் சீமையில். அவ்வாறு செல்வாக்கின் உச்சியில் இருந்த போதிலும், அவன் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றியும், அவனிடமிருந்த நற்பண்புகளைப் பற்றியும் பின்னாளில் தன் கையாலேயேதன் நண்பன் என்றும் பாராமல் சின்ன மருதுவை - செந்தமிழ் நாட்டு விடுதலை வீரனை - தொடையிலே சுட்டுப் புண்ணாக்கிய ஏகாதிபத்தியத்தின் சரியான பேராளான வெள்ளை மேஜர் ஒருவன் ஏட்டில் எழுதி வைத்துள்ளதைப் பாருங்கள்: 'சின்னமருது கம்பீரமும் கட்டழகும் வணக்கமும் நிறைந்த வியத்தகு மனிதன் நல்ல நடத்தையும் எளிதில் எவர்க்கும் காட்சி தரக் கூடிய இயல்பும் படைத்தவன். தன் தலையின் அசைப்பே நாட்டின் சட்டமெனக் கருதும் மக்களின் தலைவனாய் அவன் விளங்கிய போதிலும், தனி ஒரு காவலாளியும் பாதுகாப்புக்கு இல்லாமல் திறந்த வெளியில் வாழ்ந்து வந்தான். 1795 ஆம் ஆண்டு, பிப்ரவரித் திங்கள், நான் அவனைக் காணச் சென்ற போது அவன் இல்லத்தின் உள்ளே நுழைய விரும்பிய எவர்க்கும் சுதந்தரமாக உள்ளே புகவும் வெளியே போகவும் எவ்விதமான தடையும் இல்லை என்பதை நேரில் கண்டறிந்தேன். அச்சமயத்தில் குடிமக்களின் தந்தையாய் விளங்கிய அந்த மாவீரனுக்குக் கடவுள் கருணை புரிய வேண்டும் என்பதே அவன் நாட்டு மக்கள் ஒவ்வொருவருடைய வேண்டுகோளுமாய் இருந்தது. அவன் நாட்டு வழியாகச் செல்லும் போது ஏற்பட்ட சாதாரணமான ஒரு சந்திப்புக் காரணமாகவே அவன் எனக்கு நண்பனாகிவிட்டான். அதிலிருந்து நான் மதுரையில் இருந்த காலமெல்லாம் அவன் எனக்கு உயர்ந்த வகை அரிசியையும் சுவை மிக்க பழங்களையும் அனுப்பத் தவறியதில்லை. சிறப்பாகக் கெட்டியான தோலோடு கூடிய சுவைமிக்க பெரிய ஆரஞ்சுப் பழங்களை அவன் எனக்கு அன்போடு அனுப்பி வந்தான். அத்தகைய அருமையான பழங்களை நான் இந்தியாவின் வேறு எப்பகுதியிலும் கண்டதில்லை." பெருந்தன்மையும் வள்ளன்மையும் நிறைந்த சின்ன மருது, பின்னாளில் தன்னையே கொல்லத் துணிந்த வெள்ளைத்துரைக்குப் பழமும் அரிசியும் மட்டுமா கொடுத்து உபசரித்தான்? அந்தோ தமிழகத்திற்கே உரிய போர்க் கருவிகளை எல்லாம் பயன்படுத்தும் கலையெல்லாம் அன்றோ கற்றுக் கொடுத்தான்? ஆம். வெள்ளைத்துரை மகனுக்கு வீரமும் படைப்பயிற்சியும் கற்றுத் தந்த ஆசிரியனாய்ச் சின்ன மருது விளங்கிய உண்மையை அந்த வெள்ளைத்துரையே தன் புத்தகத்தில் வரைந்துள்ளான். அது மட்டுமா ஏகாதிபத்திய வெறியால் மனிதப் பண்பு இழந்து, உண்ண அரிசியும் சுவைக்குப் பழமும் தந்து அன்பு காட்டிய தன் நண்பனைக் கொல்லக் காரணமாயிருந்த தன்னை தன் நெஞ்சே சுட்ட சூடு பொறாமல்