பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 30 அவன் கல் நெஞ்சம் கலங்கி எழுதும் எழுத்தைப் பாருங்கள்: சின்ன மருதுதான் எனக்கு முதன் முதலாக ஈட்டி எறியவும், សា வீசவும் கற்றுக் கொடுத்தவன். வளரி என்னும் இவ்வாயுதம் இந்தியாவிலேயே தமிழ் நாட்டுப் பகுதியிலேதான் பயன்படுத்தப்படுகின்றது. ஆயினும், ஆற்றலும் திறமையும் படைத்த ஒருவர் முந்நூறு அடித் தொலைவில் உள்ள ஒரு பொருள் மீது கூட, வளரியை வியக்கத்தக்க வகையில் குறிபார்த்து எறிந்து வெற்றி பெறலாம். இத்தகைய வீர மனிதனையே நான் பிற்காலத்தில் போர் காரணமாகக் காட்டு விலங்கைப் போல விரட்டிப் படுகாயப்படுத்திச் சாதாரண வேலையாள்களால் பிடிக்க நேர்ந்தது! அதன் பின் முரிந்து போன தொடையோடு சிறையில் அவன் நொந்து கிடந்ததையும், இறுதியாக வீரம்மிக்க தன் அண்ணனோடும், அவன் வீரத்திற்குச் சிறிதும் குறையாத அவன் மகனோடும். உயிர்த்தோழர் பலரோடும் சாதாரணத் தூக்குமரம் ஒன்றில் தொங்கிக் கொண்டிருந்ததையும் காண நேர்ந்தது' ஆம் வாழ்ந்த நாளிலும் மாண்டு மறைந்த பின்னும் எதிரிகள் இதயத்தையும் உருக்கக் கூடிய அன்பும் பண்பும் வீரமும் கருணையும் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்த தமிழ் வீரர்களே சுதந்தரப் போரின் பெருமை மிக்க தளபதிகளான நம் மருது சகோதரர்கள். சின்ன மருது பெரிய மருது பெயர் கேட்டால் அந்நாளில் அழுத பிள்ளையும் வாய்மூடும்; தொண்டு கிழவரும் தம் இரு கைகளையும் குவித்து, நடுங்கும் குரலோடு, நன்றியுணர்ச்சியால் கலங்கும் கண்களோடு, இறைவனே, அந்த மாவீரர்கள் நன்றாக வாழ அருள் புரிய வேண்டும்' என்று வாழ்த்துவார்கள். இவ்வாறு பச்சைக் குழந்தை முதல் பல்லிழந்த கிழவர் வரை, ஆடவர், பெண்டிர் அனைவர் உள்ளத்தையும் கொள்ளை கொண்டு வாழ்ந்த தேசபத்தியின் வடிவாய் விளங்கிய அத்தமிழ் வீரர் இருவரும் தெய்வபத்தியிலும் எவர்க்கும் குறையாது வாழ்ந்த உண்மையை நினைக்கும் போது பத்தி படைத்தார் நெஞ்சம் உருகும்! முருகன் கோயில் கொண்டிருக்கும் குன்றக்குடியில் ஆண்டவனுக்குத் தக்க கோவில் இல்லாது இருப்பது கண்டு, மலைமேல் திருக்கோவில் கட்டி, அங்கிருந்து கண்டால் தெரியும் வண்ணம் தெற்கில் மருதாபுரி என்ற அழகிய குளத்தையும், அதன் கரையில் ஆயிரம் தென்னை மரங்களையும் உண்டாக்கினார்கள் மருது பாண்டியர்கள். இவ்வாறு அவர்கள் குன்றக்குடியான்பால் கொண்ட ஆராத காதலுக்கு அடையாளமாய் இன்றும் அங்குக் கோவில் கொண்டுள்ள ஆறுமுகப் பெருமானது திருமேனிக்குச் சாத்தப்படும் பொற்கவசம் காட்சி அளித்து வருகிறது. அப்பொற்கவசத்தில் சின்ன மருது உபயம் என்ற சீரிய எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. ஆம்