பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 32 ஒரு நாள் காட்டு வழியே சென்று கொண்டிருந்த சின்ன மருது, பசியாலும் களைப்பாலும் மயக்கமுற்றுக் கீழே சாயநேர்ந்தது. அந்நிலை கண்டு அக்காட்டினைக் காவல் காத்துக் கொண்டிருந்த ஒரு கிழவி சின்ன மருதுவின் பால் விரைந்தோடினாள். பசியாலும், அயர்வாலும் சாய்ந்து கிடந்த அவன் நிலை கண்டு, ஈன்ற குழவிமுகம் கண்டு இரங்கும் தாய் போல அவன் களைப்பை மெல்ல நீக்கிய அந்தக் கிழவி, 'ஐயா, ஏழை நான், என்னிடம் உங்கள் பசியாற்ற ஒரு பொருளும் இல்லை. ஆயினும், காலையில் நான் குடித்தது போக மிஞ்சியிருக்கும் இனிய கூழ் சிறிதிருக்கிறது. குடிக்கிறீர்களா? என்றாள். கிழவியின் கருணை மொழிகளைக் கேட்ட சின்ன மருது, அம்மா, உங்கள் பெயரென்ன? என்றான். தாயம்மாள் என்றாள் கிழவி, 'ஆ நீ தாய் அம்மாளேதான் நீ தரும் கூழும் அமிழ்தந்தான் கொண்டு வா என்று கூறிக் கிழவிதந்த கூழைக் குடித்துக் களைப்பு நீங்கினான் சின்ன மருது. அவன் உள்ளம் நன்றி உணர்ச்சியால் பொங்கியது. உடனே அவன் ஓலை ஒன்றெடுத்து அதில் முள்ளால் ஏதோ எழுதிக் கையெழுத்தும் இட்டு, அதைக் கிழவி கையில் கொடுத்தான். அது வெற்று நற்சான்றன்று இக்கிராமம் தாயம்மாள் என்னும் இக்கிழவிக்கே உரியது. என்ற சாசனம். என்னே சின்ன மருதுவின் பெரிய உள்ளம்: அக்கிராமம் இன்றும் கூழுர்’ என்ற பெயர் படைத்துச் சின்ன மருதுவின் சீரிய புகழை விளக்கி நிற்கிறது! ஏழைகளது துயர் தீர்க்கும் இறைவனாய் விளங்கிய சின்ன மருது, புலவர் நாவில் பொருந்திய புகழ் படைத்த தலைசிறந்த கொடையாளியாயும் திகழ்ந்தான். அவனது அப்பெருமையினை இக்காலத்தும் வழங்கி வரும் அழகிய தனிப்பாடல்கள் நமக்கு நினைவூட்டுகின்றன. மருது சகோதரர்கள் காலத்தில் வெள்ளைக் கம்பெனியின் தூண்டுதலாலும், பிற அரசியல் காரணங்களாலும் நாடெங்கும் கள்ளர் பயம் மிகுந்திருந்தது. ஆனால், அக்கள்ளர் கூட்டத்திற்குப் பொல்லாப் பகையாய் விளங்கினார்கள் மருது பாண்டியர்கள். ஒரு சமயம் கமுதியைச் சேர்ந்த புலவர் ஒருவர் தம் மனைவியாருடன் வேற்றுர் சென்று கொண்டிருந்த வேளையில் - இரவு நேரத்தில் கள்ளர்கள் அவரை வழி மறித்து, அவர் மனைவியாரது தாலியையும் பறித்துக் கொண்டு ஓடி விட்டார்கள். புலவர் உள்ளம் மிக நொந்தது நேரே மருது பாண்டியனிடம் போய் அவர் முறையிட்டார்: 'கணவன் உயிரோடு இருக்கும் போதே மனைவி தாலி அறுபடுகிறதே! உன் நாட்டில் செங்கோல் இல்லையா? என்ற கருத்தமைய, 'மருவிருக்கும் கூந்தல் மனையாள் கணவன் அருகிருக்கத் தாலி அறுமா?- இரவுனக்குச் செங்கோல் இலையா? இத் தேசமெங்கும் கள்ளருக்குப் பங்கோ மருதுபூ பா!'